உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் அருகே தோட்டாக்களை வெடித்து நிபுணர்கள் ஆய்வு

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் அருகே தோட்டாக்களை வெடித்து நிபுணர்கள் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வத்தலக்குண்டு: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக உத்தப்பநாயக்கனுார் வரை 27 கி.மீ.,க்கு பிரதான கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் 1400, 1250 மீ., உயரத்துக்கு தொட்டிப்பாலங்கள் உள்ளன.சந்தையூர் தொட்டிப்பாலம் அருகில் 1.58 எக்டேரில் உடைகல், சக்கை, ஜல்கற்கள் எடுக்க குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அருகில் நீர்வழிப்பாதையான தொட்டிப்பாலம் இருந்தும் குவாரி செயல்பட பொதுப்பணி, சுற்றுச்சூழல், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறையினர் தடையில்லா சான்று வழங்கியது இப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இப்பகுதியில் வெடி வைத்து கற்களை தோண்டும் போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டு பாதிப்பு உருவாகும் என விருவீடு, உசிலம்பட்டி பகுதி பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் குவாரி அருகில் கற்களை உடைக்கும் கிரஷர் இயந்திரம் செயல்பட தடை விதிக்கப்பட்டது. குவாரி அனுமதி பெற்ற ஒப்பந்தகாரர் இப்பகுதியில் தோட்டா உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதால் தொட்டிப்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுகுறித்து நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி டிச.,4 முதல் சென்னை அண்ணா பல்கலை புவியியல், சுரங்கவியல் துறை தலைவர் பால மாதேஸ்வரன் தலைமையில் துணைப்பேராசிரியர் குமார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தோட்டாக்களை வெடித்து சோதனை நடத்தினர்.நேற்று நான்கு இடங்களில் குறைந்தது 14 முதல் 30 குழிகளில் தோட்டாக்களை கொண்டு வெடித்து சோதனை நடத்தினர். தோட்டாக்கள் வெடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை அதற்கான கருவிகள் கொண்டு பதிவு செய்தனர். சோதனை முடிந்தபின் அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பாமரன்
டிச 07, 2024 10:58

நான் கூட தலைப்பு பார்த்து அட நம்மாளுங்க மெயிண்டனன்ஸ் இன்ஸ்பெக்க்ஷன் பன்றாங்க... நல்லது தானே அப்பிடின்னு பாராட்ட இருந்தேன்... பார்த்தால் அண்டா பிரியாணி போனியாக லேசா எடுத்து டேஸ்ட் பாக்குற மேட்டர் போல... திருட்டு தீவட்டிகளா... வேற பக்கம் போயி நோண்ட வேண்டியது தானே...??


Arul. K
டிச 07, 2024 07:47

வஞ்ச புகழ்ச்சி


Kasimani Baskaran
டிச 07, 2024 05:57

நீர்வழிப்பாதைகளை வேறு வழியாக மாற்றிவிட்டு குவாரிக்கு அனுமதி கொடுத்து இருக்க வேண்டும்.


இரா.சந்தான கிருஷ்ணன் உசிலம்பட்டி இராஜக்காபட்டி.
டிச 07, 2024 07:34

மாற்று நீர் வழி பாதைகளுக்கு பதில் மாற்று மலைகள் தேர்ந்தெடுக்கலாம், ஏனென்றால் 58 கால்வாய் திட்டம் என்பது எனது உசிலம்பட்டி மக்களின் நீண்டகால கனவு மேலும் பல கிராமங்களில் இந்த நீர் பாசனம் கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. உசிலம்பட்டி தெற்கு பகுதியில் இன்றளவும் மழையை எதிர்பார்த்து தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால் இந்த கல் குவாரிக்கு அளித்த அனுமதி ரத்து செய்ய வேண்டும். இதுவே உசிலம்பட்டி மக்களின் கோரிக்கை..


புதிய வீடியோ