உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீ கடை பெஞ்ச்: எக்ஸ்பிரஸ் மோடி; அதிகாரிகள் கூட்ஸ்!

டீ கடை பெஞ்ச்: எக்ஸ்பிரஸ் மோடி; அதிகாரிகள் கூட்ஸ்!

''கவர்ன்மென்ட் ஆபீஸ்ல உட்கார்ந்துண்டு, சொந்த ஜோலியை பார்த்துண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''திருவள்ளூர் மாவட்டம், பிரபல முருகன் கோவில் ஊரின், பி.டி.ஓ., ஆபீஸ்ல இருக்கற, 'துணை' அதிகாரியை தான் சொல்றேன்... இவர், 'சைடு பிசினசா' வீடுகள் கட்ட பிளான் போட்டு தரார் ஓய்...''இவரது மகனும் இன்ஜினியரிங் முடிச்சுண்டு, வீடுகளுக்கு பிளான் போட்டு தரார்... ஊராட்சிகள்ல வீடுகள் கட்டறதுக்கு, யூனியன் ஆபீஸ்ல பிளான் அப்ரூவல் வாங்கணுமோல்லியோ...''இப்படி வர்ற விண்ணப்பங்களை துணை அதிகாரி எடுத்து வச்சுண்டு, 'இதுக்கு நான் தான் பிளான் போட்டு தருவேன்... அதுக்கு தனியா அமவுன்ட் தந்துடணும்... இல்லாட்டி, பிளான் அப்ரூவல் கிடைக்காது'ன்னு சொல்லிடறார் ஓய்...''யாராவது வெளியில பிளான் போட்டு வாங்கிண்டு வந்தா, எதையாவது சொத்தை காரணம் சொல்லி, 'ரிஜக்ட்' பண்ணிடறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.டீ கடை ரேடியோவில் வந்த, 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...' என்ற பாடலை ரசித்தபடியே, ''தி.மு.க., கோட்டையை தகர்த்து காட்டுறேன்னு சொல்லி, வாய்ப்பு கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த கட்சியில, யாருவே இப்படி சொல்லுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''பா.ஜ., சார்புல, தென் சென்னை தொகுதியில போட்டியிட, நடிகை குஷ்பு ஆர்வமா இருக்காங்க... இந்த தொகுதிக்கு, அந்த கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் குறி வச்சிருக்கிறதால, மத்திய சென்னை தொகுதிக்கும் சேர்த்து, 'துண்டு' போட்டிருக்காங்க பா...''முஸ்லிம் ஓட்டுகள் கணிசமா இருக்கிற, தி.மு.க., கோட்டை யான மத்திய சென்னையை, பா.ஜ., கோட்டையா மாத்தி காட்டுறேன்னும் சொல்லியிருக்காங்க...''போன சட்டசபை தேர்தல்லயே, சேப்பாக்கம் தொகுதியில நிற்க தான் குஷ்பு முடிவு பண்ணியிருந்தாங்க... கடைசி நேரத்துல, அவங்களுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை ஒதுக்கிட்டாங்க பா...''அந்த தொகுதியின் முஸ்லிம் வாக்காளர்கள், குஷ்புவுக்கு கணிசமான ஓட்டுகளை பதிவு செஞ்சிருக்காங்க... இதையும் சொல்லி, மேலிடத்துல சீட் கேட்டுட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மோடி காட்டுற வேகத்தை அதிகாரிகள் காட்ட மாட்டேங்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''அம்ரித் பாரத் திட்டத்துல, ரயில்வே ஸ்டேஷன் களை நவீனப்படுத்த, மத்திய அரசு கோடிக்கணக்குல நிதி ஒதுக்குதுல்ல... ஆனா, இந்த பணிகளை நம்ம தெற்கு ரயில்வே அதிகாரிகள் துரிதப்படுத்த மாட்டேங்கிறாங்க...''இதனால, சமீபத்துல தமிழகம் வந்த பிரதமரால, பல புதிய திட்டங்களை ரயில்வே ஸ்டேஷன்களில் துவக்க முடியலைங்க... அதே மாதிரி, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாடியே, ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே துாக்கு பாலத்தை திறந்துடலாம்னு மோடி பிளான் பண்ணியிருந்தாருங்க...''துாத்துக்குடி நிகழ்ச்சியிலயே இதையும் திறக்க திட்டமிட்டாங்க... ஆனா, 'பணிகள் முழுசா முடிய மூணு மாசமாகிடும்'னு ரயில்வே அதிகாரிகள் கையை விரிச்சுட்டாங்களாம்...''மோடி, எக்ஸ்பிரஸ் வேகத்துல கொண்டு வரும் திட்டங்களை, அதிகாரிகள் கூட்ஸ் வண்டி வேகத்துல செய்றாங்கன்னு பயணியர் புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி