உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சென்னை:பயணியரின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூர் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எழும்பூர் - சந்திரகாச்சிக்கு செவ்வாய்கிழமைகளில் மதியம் 1:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் 19, 26, ஏப்., 2ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்படும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சி - சென்னை எழும்பூருக்கு புதன் கிழமைகளில் இரவு 11:40 மணி இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 20, 27, ஏப்., 3ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது சென்னை எழும்பூர் - சந்திரகாச்சிக்கு, இரவு 11:00 மணிக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள், வரும் 16, 23, 30 மற்றும் ஏப்., 6ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக, சந்திரகாச்சி - சென்னை எழும்பூருக்கு காலை 10:00 மணிக்கு திங்கள் கிழமைகளில் புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், வரும் 18, 25, ஏப்., 1, 8ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ