உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி - ஆமதாபாத் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

திருச்சி - ஆமதாபாத் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சென்னை:திருச்சி - ஆமதாபாத் சிறப்பு ரயில்களின் சேவை, இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் - திருச்சிக்கு வியாழன் தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் 29ம் தேதி வரையும்; திருச்சி - ஆமதாபாத் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மார்ச் 3 வரையும் நீட்டித்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள்

குஜராத் மாநிலம் ஓக்ஹாவில் இருந்து வரும் 5, 12, 19, 26ம் தேதிகளில் இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாளில் காலை 11:45 மணிக்கு மதுரைக்கு வந்தடையும் மதுரையில் இருந்து வரும் 9, 16, 23, மார்ச் 1ம் தேதிகளில் நள்ளிரவு 1:15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 10:20 மணிக்கு ஓக்ஹாவுக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்