எக்ஸ்டிராஸ்
* ஹரியானாவின் பானிபட் நகரில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 7-5, 2-6, 1-6 என, சகவீராங்கனை ஷ்ருதியிடம் தோல்வியடைந்தார். * ஜெர்மனியின் ஹேகன் நகரில் நடந்த குதிரையேற்ற போட்டியில், 70.94 சதவீதத்துடன் 2வது இடம் பிடித்த இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா 26, வெள்ளி வென்றார். * கிர்கிஸ்தானில், ஆண்களுக்கான (18 வயது) ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கி (ஏப். 27 - மே 3) தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.