உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்

திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v6px6g2n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வம். இவர் அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதைக் கண்ட வி.சி.க., நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து, அந்த கொட்டகையில் போலீசார் சோதனை செய்தபோது, 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், ஏர்கன் பிரிண்டிங் மிஷின், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து வி.சி.க., உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Bhaskaran
ஏப் 01, 2025 13:47

சிறுத்தை உறுப்பினர்கள் அனைவரின் வங்கி கணக்குகள் தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றை ஆராய்ந்தால் பெரும் பூகம்பம் வெடிக்கும் தேசத்தின் இறையாண்மைக்கு சவால்விடும் இந்த செயலுக்கு ஆளும் தரப்பில் ஆதரவு உள்ளதா என்பதையும் மத்திய அரசு புலனாய்வு செய்யவேண்டும்


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:35

நமது அரசு அடிக்கடி வேலையில்லா மனிதர்கள் சுய தொழில் செய்து பிழைக்கலாம் என்பதை தவறாக புரிந்துகொண்ட இந்த மனிதர் இந்த தொழில் செய்து மாட்டிக்கொண்டார். ஐயோ பாவம்


JaiRam
மார் 31, 2025 23:25

தறுதலை சிறுத்தை


Nagarajan D
மார் 31, 2025 23:04

இவனுங்க சீட்டா கட்சியா இருந்து இப்ப சீட்டிங் கட்சியா மாறிட்டானுங்க.. ஆனால் எப்பவுமே ஒதுக்கீட்டு கோஷ்ட்டி தான்


எவர்கிங்
மார் 31, 2025 20:47

என் கவுண்டர் செய்வது நாட்டுக்கு நல்லது


மஹா
மார் 31, 2025 19:36

இது என்ன அநியாயம் , நம் ஏன் பணத்துக்காக மத்திய அரசை நம்பி இருக்க வேண்டும்? நம்மக்கு தேவையான பணத்தை நாம் ஏன் அச்சடிக்க முடியாது? இது ஓரவஞ்சனை .தமிழ் நாட்டின் கடன் நிலமையை பார்த்து பரிதாப பட்ட திராவிட அன்பர் சுயதொழில் செய்து கடனை அடைக்க முயற்சிசெய்கிறார். நிர்மலா சீதாராமன் இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். அடுத்த தமிழக பட்ஜெட்டில் எல்லோருக்கும் கலர் பிரிண்டர் , இங்க் கொடுப்பதற்கு மத்திய அரசின் மான்யம் கேட்டு போராடலாம். மத்திய அரசிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் அவசியம் தமிழகத்துக்கு இனிமேல் இல்லை.


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 19:04

கோட்டாவில் படித்த திறமையை காட்டி உள்ளார். இவரது திறமையை திராவிட கட்சிகள் பாராட்டவேண்டும்.


skanda kumar
மார் 31, 2025 19:03

அந்த நோட்டுகள்ல இந்தி இருந்தது அதனால அப்பாவுக்கு கோபம் வந்து கைது.


skanda kumar
மார் 31, 2025 19:02

இதுதான் மாநில சுயாட்சி. நோட்டு உரிமை.


skanda kumar
மார் 31, 2025 19:01

கனிமொழி , சு பி.வி , வீரமணி, பிரகாஷ்ராஜ், கம்யூனிஸ்ட்ஸ், கமல், ஆல் மவுனம்.


முக்கிய வீடியோ