உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பெண் எஸ்.ஐ.,

போலி பெண் எஸ்.ஐ.,

துாத்துக்குடி :

எஸ்.ஐ., கைது

துாத்துக்குடி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி, 21. இவர் சென்னையில் எஸ்.ஐ.,யாக வேலை பார்ப்பதாக தோழிகளிடம் கூறினார். போலீஸ் உடையில் இருப்பது போன்ற படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். துாத்துக்குடி மேற்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தோழியின் வீட்டுக்கு வந்த கங்காதேவி, என்கவுண்டர் விஷயமாக வந்துள்ளதாக கூறி, இரண்டு நாள் தங்கினார். திடீரென வீட்டில் இருந்த தாலி மற்றும் 2,000 ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.இதுகுறித்து, தோழியின் தாய் கிருஷ்ணவேணி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுபோல, சுனாமி காலனியை சேர்ந்த மற்றொரு தோழியான வளர்மதி வீட்டிலும் கங்காதேவி 2,000 ரூபாய் திருடியது தெரிந்தது. போலீசார் நேற்று கங்காதேவியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

எஸ்.ஐ., கைது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை