வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒருதடவை வாக்களித்தாலே பாஞ்சி லட்சம் கிடைச்சுதே.
சென்னை:கடந்த சில மாதங்களாக, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதுபோல, செயற்கை நுண்ணறிவு திறனான ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், போலி வீடியோக்களை தயாரித்து, பதிவேற்றி வருகின்றனர். தற்போது, ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி, பிரதமர் மோடி சொல்வது போன்ற வீடியோ உலா வருகிறது. இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது.பிரதமர் மோடி பேசுவது போல், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதில் ஒரு முறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அந்த வாரமே உங்கள் வங்கி கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் வரும். இந்த திட்டத்தில் சேர, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இதேபோன்று உலா வரும் வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, அரசும் எச்சரித்துள்ளது.
ஒருதடவை வாக்களித்தாலே பாஞ்சி லட்சம் கிடைச்சுதே.