உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பாதையில் உருண்டு விழும் பாறைகள்

ரயில் பாதையில் உருண்டு விழும் பாறைகள்

குன்னுார்: குன்னுார்– ஊட்டி இடையே மலைரயில் பாதையில் பாறைகள் உருண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், 29ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்த நிலையிலும், கேத்தி – லவ்டேல் இடையே பாறைகள் விழுந்தன. இதேபோல், ஹில்குரோவ் அருகே ஏற்பட்ட மண் சரிவும் ஊழியர்களால் அகற்றப்பட்டது. மழை பெய்வது நின்றபோதும் திடீரென பாறைகள் உருண்டு விழுவதால், மலை ரயில் குறித்த காலத்தில் இயக்குவதில் சிரமம் உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை