உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறிய படைப்பாளிகள்னா ஏளனமா? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் கேள்வி

சிறிய படைப்பாளிகள்னா ஏளனமா? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் கேள்வி

சென்னை: உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு அனுமதிக்காக காத்திருக்கும் நீங்கள், என்னைப் போன்ற எளிய சிறிய படைப்பாளிகளிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டது சரியா? என்று நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் உருவான ஆவணப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தின் பாடலையும், காட்சிகளையும் பயன்படுத்த, அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்ததால், நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சித்து நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zzxx09ex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே போய், மேடையில் தனுஷ், 'வாழுங்கள் வாழ விடுங்கள், எதற்காக ஒருவரை வெறுக்கிறீர்கள்' என்று பேசிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, 'வாழு வாழ விடு' இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி ரசிகர்களுக்காக, மனிதர்கள் மாற வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்; பிறரை மகிழ்வித்து மகிழ வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனுஷூக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, LIC பட விவகாரத்தை முன்னிறுத்தி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3 வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்? என் கதைக்கும், அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில், பதில் அளித்தும், அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், “உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும்?அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்?உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு காத்திருந்து பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகதிற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Uuu
நவ 17, 2024 11:59

மொதல்ல மக்கள் இந்த சினிமா போன்ற பொழுதுபோக்கு கூத்தாடிகள் பக்கம் போவதை புறம் தள்ள வேண்டும்


rama adhavan
நவ 17, 2024 00:35

வெட்டிகளின் வினோதமான மக்களுக்குப் பயன் இல்லாத வெட்டி சண்டை. புறம் தள்ள வேண்டும்.


Columbus
நவ 16, 2024 23:58

Entire thing is a publicity stunt. Just to draw attention to the OTT release of their wedding in Netflix, they are doing it. We the public are fools to be drawn into this and freely following and commenting.


சிவா. தொதநாடு.
நவ 16, 2024 22:53

டேய் ஓரமா போய் விளையாடுங்க...


Venkateswaran Rajaram
நவ 16, 2024 18:57

இவர்கள் ஒன்றும் சமூக விழிப்புணர்வுக்காக இதை செய்யவில்லை பணம் ஈட்டுவதற்க்காகத்தான் இந்த doc. பிலிம் தயார் செய்திருக்கிறார்கள் அதனால் தனுஷ் கேட்பதில் எந்த தவறும் இல்லை


raja
நவ 16, 2024 18:46

சினிமா பிலைப்பே ஒரு திருட்டு பிழைப்பு தான் தற்போது அது இசை என்றாலும் பாடல் என்றாலும் கதை என்றாலும் திருடித்தான் செய்கிறார்கள்...சிவப்பு ஜயண்டு , ஜாபர் சாதிக் போன்ற போதை கடத்தல் மன்னன் கடத்திய போதை பொருளில் இருந்து வந்தது என்றும் திருடர்கள் கொடுக்கும் பணம் திருட்டு பணம் என்று தெரிந்தும் கதாநாயகர்கள் நாயகிகள் வாங்கும் சம்பளம் கறுப்பாகவும் வெள்ளையாகவும் கொடுக்கப்படுகிறது என்பதும் சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.....


T.Senthilsigamani
நவ 16, 2024 18:31

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். கூத்தாடிகள் இரண்டு பட்டால், சினிமா உலகுக்கே கொண்டாட்டம். ஹையா ஜாலி தான். மீம்ஸ் தூள் பறக்கும்


sundararajan
நவ 16, 2024 17:50

கூத்தாடி பிழைப்பு காத்தாடி போலத்தான்.


புதிய வீடியோ