உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காரைக்குடியில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 3 பேர் கைது

காரைக்குடியில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: காரைக்குடி அருகே பிரபல ரவுடியை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து, ஒரு கும்பலால் பிரபல ரவுடி ஜான் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=232bsokx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தாக்கம் அடங்குவதற்குள், காரைக்குடியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் சேர்வாஊரணியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோஜ். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த மர்மகும்பல் மனோஜை வழிமறித்து, ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். மனோஜின் நண்பர்கள் இருவர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மனோஜின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

கைது

இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த குருபாண்டி, விக்னேஷ் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு குருபாண்டியின் தந்தை லட்சுமணன் கொலைக்கு பழி வாங்க இக்கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

அப்பாவி
மார் 21, 2025 17:45

காரைக்குடியில் கொஞ்சம் அமைதி நிலவடும். வாழ்த்துக்கள்.


kulandai kannan
மார் 21, 2025 16:44

தமிழ்நாட்டில் எப்படி மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கிறது என்று இப்போது புரிகிறது.


vbs manian
மார் 21, 2025 14:46

தமிழ் நாடு அமைதி பூங்கா என்று யாரோ அடிக்கடி சொல்கிறார்.


Arul. K
மார் 21, 2025 14:23

பிரபல ரவுடி, பிரபல ரவுடி என்று தலைப்பில் போடுகிறீர்கள். ஆனால் அவன் செத்த பிறகுதான் அப்படி ஒருத்தன் இருந்ததே தெரியுது


Anantharaman Srinivasan
மார் 21, 2025 13:11

ஸ்டாலினை கேட்டு பாருங்க.. தமிழ்நாடு அமைதி பூங்கா. அதிமுக ஆட்சியைவிட கொலை குற்றங்கள் குறைவு என்று துண்டு சீட்டை வைத்து படித்துக்காட்டுவார்.


senthilanandsankaran
மார் 21, 2025 13:02

கொலையற்ற அமைதி பூங்காவனம் தமிழகம் ..சொல்வதை சுருக்கமாக சொல்லணும்..


Kumar Kumzi
மார் 21, 2025 13:00

திராவிஷ மாடல் ஆட்சியின் அமைதி பூங்கா சிரிப்பாய் சிரிக்கிறது ஹாஹாஹா


உழவன்
மார் 21, 2025 12:58

காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவது என்பது பிணையில் வருபவர்களை கொலை செய்வதற்கு ப்ளான் போடுவதற்கு வசதியாக உள்ளது ... டெக்னாலஜி வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் வீடியோ confrence வாயிலாக அவர்கள் இருப்பை உறுதி செய்யலாம்...அதை விடுத்து ஜாமீன் கொடுத்து அவர்கள் உயிரை பலி கொடுக்க நீதிபதிகள் காரணமாக உள்ளனர். இதற்கு ஜாமீன் கொடுக்காமலே இருந்துருக்கலாம். கேட்டால் அவன் என்ன யோக்கியனா? சாகட்டும் என்று பதிவுகள் வேறு..அவன் யாருக்காக குற்றம் செய்தான் அவன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் யாரேனும் இருக்கின்றனரா? என விசாரிக்க இயலாமல் போய் விடுகிறது...


உழவன்
மார் 21, 2025 12:58

காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவது என்பது பிணையில் வருபவர்களை கொலை செயவதற்கு ப்ளான் போடுவதற்கு வசதியாக உள்ளது ... டெக்னாலஜி வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் வீடியோ confrence வாயிலாக அவர்கள் இருப்பை உறுதி செய்யலாம்...அதை விடுத்து ஜாமீன் கொடுத்து அவர்கள் உயிரை பலி கொடுக்க நீதிபதிகள் காரணமாக உள்ளனர்... இதற்கு ஜாமீன் கொடுக்காமலே இருந்துருக்கலாம்...கேட்டால் அவன் என்ன யோக்கியனா? சாகட்டும் என்று பதிவுகள் வேறு..அவன் யாருக்காக குற்றம் செய்தான் அவன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் யாரேனும் இருக்கின்றனரா? என விசாரிக்க இயலாமல் போய் விடுகிறது...


KavikumarRam
மார் 21, 2025 12:43

ஆனா அரசை பாராட்டியே ஆகவேண்டும். சாவுறது எல்லாம் ரவுடிப்பாயாலா இருக்கிறவரைக்கும் இந்த தூங்கும் போலீசு துறையும், உளவுத்துறையும் தூங்கும் அதன் முதலாளியும் கெக்கே பிக்கெக்கேன்னு உளறிக்கிட்டு திரியலாம்..


Pandi Muni
மார் 21, 2025 16:03

அதுக்கென்ன பண்றது தமிழனின் தலைவிதி தமிழகத்தின் சாபக்கேடு தி.மு.க


சமீபத்திய செய்தி