மேலும் செய்திகள்
பஸ் மோதி மூதாட்டி பலி
04-Sep-2026
துாத்துக்குடி: ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி உலகுமுத்து, 45, மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உலகுமுத்து. மனைவியை பிரிந்து வாழ்ந்தார். வல்லநாடு அருகே, காட்டுப்பகுதியில் நேற்று ஆடுகள் மேய்த்தார். திடீரென இடி, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முறப்பநாடு போலீசார், உலகுமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
04-Sep-2026