வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆள்பவர்கள் குற்றவாளிகளை ஊக்குவித்து ஆதாயம் அடைகின்றனர்.
சென்னை: 'விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தராமல், ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தனியார் காப்பீட்டு நிறு வனங்களை, தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது' என, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: பரந்துார் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் உள்ளிட்ட ஏரிகள், கால்வாய்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதனால், பாலாறு, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து பாதிக்கப்படும். கடந்த, 2023ம் ஆண்டில் இயற்றப் பட்ட, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டமானது, விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் அபகரிக்க வழி வகுக்கிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி, கட்டுமான நிறுவனங்களுக்கு இடம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறா விட்டால், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் காணாமல் போய்விடும். காப்பீட்டு திட்டம் செயல்படுத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, தனியார் காப்பீட்டு நிறு வனங்களை ஊக்குவிக்கும் செயலில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது. ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல், அரசு மற்றும் விவசாயிகளின் பணம் இந்த நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால், இந்நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை தராமல் ஏமாற்றி வருகின்றன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.
மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆள்பவர்கள் குற்றவாளிகளை ஊக்குவித்து ஆதாயம் அடைகின்றனர்.