உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வனத்துறையினருக்கு எதிராக வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்

வனத்துறையினருக்கு எதிராக வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: விளைபயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிப்பது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினருக்கும், வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நவ.,5ல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக காட்டுப்பன்றிகள் உருவாகி விட்டன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுப்பன்றிகள், விளைநிலத்தில் இருக்கும் மொத்த பயிர்களையும் நாசம் செய்து விடுகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகள் பல்லாண்டுகளாக தொடர்ந்து புகார் செய்தும் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. மாறாக, காட்டுப்பன்றியை கொன்றாலோ, கொல்ல முயற்சித்தாலோ, விவசாயிகள் மீது வனச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்கு தீர்வாக, பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பரிசீலிப்பதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் தொடர்ந்து உறுதிமொழி அளித்தாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. தற்போது இந்த விவகாரம், ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர், தங்கள் விவசாய நிலத்தில் வந்த காட்டுப்பன்றிகளை பிடித்து அடர்ந்த வனத்தில் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்தனர்.இதற்கென கர்நாடகாவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பன்றிகளை பிடித்தனர். இந்த பன்றிகளை வனத்தில் கொண்டு சென்று விட முயற்சித்தபோது, 'நீங்கள் எப்படி பன்றிகளை பிடிக்கலாம். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என்று வனத்துறை அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர். பன்றிகளை பிடித்தவர்கள், விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்து தங்கள் வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இதையறிந்த விவசாயிகள் சங்க தலைவர் குமார ரவிக்குமார் மற்றும் விவசாயிகள், வனத்துறை வாகனங்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, குமார ரவிக்குமார் மீது வனத்துறையினர் புகார் அளித்தனர். போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி விடுவித்தார். இதனை வெளியே திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.விவசாயிகள் மத்தியில் குமார ரவிக்குமார் பேசியதாவது:சட்டம், நியாயம் நம் பக்கம் இருக்கிறது. வனத்துறையினர் வேலை வனத்துக்குள் மட்டும் தான். நம் விவசாய நிலத்துக்குள் வரக்கூடாது. வனத்துறையினர் அத்துமீறல்களுக்கு பயப்பட வேண்டாம். நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். வனத்துறையினருக்கு பயப்பட தேவையில்லை. ஐந்தாம் தேதி அனைவரும் தாளவாடி தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் வந்து விடுங்கள். இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தியே தீர வேண்டும், இவ்வாறு குமார ரவிக்குமார் பேசினார்.மலையடிவார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பிரச்னை அதிகம். இதற்கு வனத்துறையினரால் எந்த தீர்வும் காண முடியாத நிலையில், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் சூடு பிடித்துள்ள இந்த விவகாரம், பிற மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தாளவாடியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ள விவசாயிகள், அதே பாணியில் தங்களது மாவட்டங்களிலும் காட்டுப்பன்றிகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

raja
நவ 02, 2024 10:53

இந்த கேடுகெட்ட விடியல் தானே வேண்டும் என்று தானே இந்த கோவால் புற கொள்ளை கூட்ட கோமாளிகளை கொண்டு வந்தீங்க .. இப்ப அனுபவிங்க...


சம்பர
நவ 02, 2024 10:33

விவசபியிகளிடம் ஒற்றுமை இல்லை.1008 சங்கங்கள் அதெல்லாம் நாரயணசாமி நாயுடு உடன் முடிந்துவிட்டது இத்தண: m: ட : A கள் இருக்கானுக ஒருத்தன் கூட குடியானவன் இல்லயா


Ram pollachi
நவ 02, 2024 10:22

காட்டு பன்றியை விட எலிகள் தான் விவசாயிகளின் முதல் எதிரி... இதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.


சாண்டில்யன்
நவ 02, 2024 16:43

அப்போ வெள்ளைக்காரன்தான் கட்டுப்படுத்தினான் இப்போ கட்டுப்படுத்த யாரு இருக்கா


pmsamy
நவ 02, 2024 09:55

காட்டுக்குள் விளைநிலம் கட்டியது விவசாயிகளின் தவறு. விவசாயியே வெளியேறு


Pon Thiru
நவ 02, 2024 13:52

மனுசனா இல்ல மிருககமா ... விவசாயிகளை பார்த்தால் இப்படி பேச தோணுதுன்னா உனக்கு அந்த தொல்லையை பற்றிய அறிவு இல்லை அவர்களின் வழியும் தெரியாது . இதே போல் மயில்களின் தொல்லையும்


ராம்குமார் ராமநாதன்
நவ 02, 2024 09:54

காட்டுப்பன்றி என்னவெல்லாம் செய்யும் எதை நாசப்படுத்தும் அதனால் என்னவெல்லாம் நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் கலெக்டர் ஆபீஸில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு தெரியவே தெரியாது. அதனால் அவர்களுக்கு சீரியஸ்னஸ் புரிய மாட்டேங்குது.


மணியன்
நவ 02, 2024 09:53

மயில் கூட்டங்கள் காட்டுப்பன்றி போல விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.தெருநாய்கள் எல்லாமக்களின் உயிருக்கும் ஆபத்தாக உள்ளன.பாதிக்கப்பட்ட விவசாயி என்ற முறையில் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,நீதிமன்றங்கள்,மிருகபாதுகாப்பு ஆர்வலர்கள் ஆகியோரை கேட்கிறேன் நீங்கள் எல்லாம் சாப்பிடும் போது விவசாயின் துயரத்தை நினைத்துப்பார்க்க மாட்டீர்களா?. மனித துயரத்தை விட இந்த கேடு விளைவிக்கும் மிருகம்,பறவைகளை காக்கும் சட்டங்கள் தற்காலத்துக்கு தேவையா?. மனசாட்சி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.


சின்னசேலம் சிங்காரம்
நவ 02, 2024 09:50

நாட்டிலும் கூட நிறைய பன்றி தொல்லை தாங்க முடியவில்லை. யாரிடம் போய் புகார் சொல்வது


sridhar
நவ 02, 2024 09:07

நீண்ட நாட்களாகவே ஈரோட்டில் காட்டுப்பன்றி தொல்லை அதிகம், நூறு வருஷம் முன்பு கூட இருந்தது .


முக்கிய வீடியோ