உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் வதைபடும் விவசாயிகள்

தி.மு.க., ஆட்சியில் வதைபடும் விவசாயிகள்

மேடைதோறும், 'நானும் டெல்டாக்காரன்' என்று வெற்று பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு, 'ஒன்றியம் தோறும் தானிய கிடங்குகள் அமைத்து, உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும்' எனும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி மட்டும் மறந்து போனது ஏன்? கொடுத்த வாக்குறுதிப்படி, புதிய சேமிப்பு கிடங்குகளை தான் அமைக்கவில்லை என்றால், நடப்பாண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்பு கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் 50 சதவீதம் குறைத்ததோடு, அரசு கொள்முதல் நிலையங்களில், தானியங்களை மழையில் நனைய விட்டு வீணாக்கி விவசாயிகளை வதைப்பது ஏன்? இப்படி கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், விவசாயிகளின் நலனையும் கை கழுவி, அவர்களது வயிற்றில் அடிக்கும் தி.மு.க., அரசை, விவசாயிகள் வரும் சட்டசபை தேர்தலில், வீட்டுக்கு அனுப்புவது உறுதி. -- நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ