உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

சிதம்பரம் : ''தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களில் ஒவ்வொரு நபரும் பயனடைந்துள்ளனர்'' என தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:மாம்பழ விவசாயிகளுக்கு இங்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. அதையெல்லாம் காது கொடுத்து கேட்டு, அவர்கள் பிரச்னைகளை களைவதோடு, விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், எது பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்கா சென்றுள்ளார் என, என்னைக் குறித்து, அவதூறு தகவல் சொல்லி உள்ளார் பா.ம.க., தலைவர் அன்புமணி. தமிழகத்தில் இப்படியொரு அப்பா - மகன் சண்டையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த சண்டையை மறைக்க, இருவரும் மாம்பழம் விற்கின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்னை என்று யாருக்கும் புரியவில்லை. எதற்கெடுத்தாலும், தி.மு.க.,வை திட்டுவதையே வாடிக்கையாக்கி உள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பது கொடுக்கல் - வாங்கல் பிரச்னையா, பதவி சண்டையா, குடும்ப சண்டையா என தெரியவில்லை. அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால், அதை மறைக்கவே, இவர்கள் சண்டைக்கு பின்னணியில் தி.மு.க., இருப்பது போல பேசி மடை மாற்றம் செய்யப் பார்க்கின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH
ஜூலை 03, 2025 13:40

மாம்பழம் விவசாயிகள் அல்லல்... துன்பம்... அவதி.... ஆனால் இந்த பிரச்சினையை அமைச்சர் விமர்சனம் செய்வது பரிதாபம்... திராவிட மாடல் ஆட்சியில் இது ஒன்றும் இல்லை.. வாய்க்கு வந்தபடி பேசலாம்.. சாரி கேட்டு விடு அமைச்சரே மாம்பழ விவசாயிகளிடம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 03, 2025 06:53

உலகிலேயே மிகசிறந்த முதல்வர் ஸ்டாலின் தான். மிகசிறந்த ஆட்சி திமுக ஆட்சிதான். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கூறப்பட்ட கோவையில் ஸ்பின்னிங் தொழிற்சாலைகள் குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டன, ஆனால் தமிழ் நாட்டில் நாள்தோறும் டாஸ்மாக் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு விற்பனை இலக்கை அடைந்துவிடுகிறது. இதைவிட சிறப்பான ஆட்சியை இந்தத் கொம்பனாலும் தரமுடியாது..


புதிய வீடியோ