உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தை மகனுக்காற்றும் உதவி; உதயநிதிக்கு பதிலாக மானியக்கோரிக்கையை முன் வைத்தார் முதல்வர்!

தந்தை மகனுக்காற்றும் உதவி; உதயநிதிக்கு பதிலாக மானியக்கோரிக்கையை முன் வைத்தார் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், அவரது துறை சார்ந்த மானியக்கோரிக்கையை சட்டசபையில் முன் வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு துறை அமைச்சரும் மானியக்கோரிக்கையை முன் வைத்து, எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.இன்று 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி கவனிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி வரவில்லை.முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''நேற்று துணை முதல்வர் உதயநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சட்டசபைக்கு வந்திருந்தார். இன்றைக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கி உள்ளனர். எனவே, நான் மானியக்கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன்,'' என்று கூறி, கோரிக்கையை முன் வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Matt P
மார் 28, 2025 08:30

ஓய்வை சட்டசபையிலும் எடுக்கலாமே. சட்டசபையில் உறங்க கூட செய்யலாம்.


Suresh Velan
மார் 28, 2025 13:21

அங்கே தான் இருக்கு பாய்ண்ட். இந்த ஆளு எப்ப டாஸ்மார்க் ஊழலில் ED பிடிக்க போறாங்களோ என்று கிலியில் உள்ளார், அதற்கென அலிபி தயார் பண்ணுவதற்காக 24 மணி நேரமும் அந்த வேலைகளை ஒரு பயத்தோடு செய்து வருகிறார். டாஸ்மாக் ஊழல் பணம் எல்லாம் ரெட் jiant movies கு வந்துள்ளதை எப்பவோ ED ஆதாரத்துடன் கண்டு பிடித்துள்ளது. எனவே, இந்த காய்ச்சலில் இருக்கும் சின்னவர் ஊழல் கேசில் ED ஜெயிலுக்கு கொண்டு போவது நிச்சயம்.


vijai hindu
மார் 27, 2025 22:48

இந்த உருட்டுற வேலை எல்லாம் வேணாம் எழுத்துகூட்டி படிக்கிறவருக்கு என்ன வந்து பேசப் போறார் பேசாம ரெஸ்ட் எடுக்கிறது பெஸ்ட்


Kulandai kannan
மார் 27, 2025 18:58

உதயநிதி தட்டுத் தடுமாறி பேசி, ஊரே சிரிக்க வேண்டாம் என்று முதல் மந்திரி இந்த முடிவு எடுத்திருப்பார்.


Matt P
மார் 31, 2025 09:57

அப்பா மட்டும் தட்டு தடுமாறி பேசாதது மாதிரி சொல்கிறீர்களே.


Venugopal, S
மார் 27, 2025 18:57

யாரோ எழுதி குடுத்ததை தட்டுத் தடுமாறி படிக்க வேண்டும். இதுல இந்த பில்ட் அப் வேற...மைண்ட் வாய்ஸ்...


Rathinasabapathi Ramasamy
மார் 27, 2025 21:47

எப்படி ஓ மை காட் னு ஓடினரே, அதுபோலவா,


M Ramachandran
மார் 27, 2025 17:27

தத்தி 2 வுக்கு தத்தி ஒன்னு உதவி ஒன்னுக்குள்ளாரா ஒன்னு. அடுத்த சட்ட சபைய்ய தேர்தலில் 3 வதாக துர்கா அம்மையார் பிறகு அம்மையார் தான் கணக்கு மந்தி ரி


Ramesh Sargam
மார் 27, 2025 16:55

அதான் துணை முதல்வர் பதவி கொடுத்து தந்தை ஸ்டாலின், மகன் உதயநிதிக்கு உதவி ஏற்கனவே செய்துவிட்டாரே.. ? அப்புறம் கார் ரேஸ் உதவி. இப்ப என்ன புதுசா உதவி?


V GOPALAN
மார் 27, 2025 16:29

ஸ்டாலின் இன்பநிதியை உதயநிதி போல் வேடம் அணிந்து வாசிக்க சொல்லியிருக்கலாம்.


V GOPALAN
மார் 27, 2025 16:25

His brain also will never improve


Kumar Kumzi
மார் 27, 2025 16:13

வீரன் வீரியமாகிடுச்சி போல நைனாவுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 16:10

அப்பா தன் கடமையை நிறைவேற்றினார் அப்பாவாக. முதல்வராக பொறுப்பாக நடந்து கொண்ட அப்பா. தான் ஆடா விட்டாலும் தன் சதையாடும் என்பதற்கு இணங்க பொறுப்பான அப்பா. மகன் இளையவர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு கூச்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்பாவிற்கு அப்படியில்லை. எப்பொழுதும் மகனுக்கு நல்லது நினைப்பவரே அப்பா. மகனை எந்த அப்பாவும் விட்டு கொடுக்க மாட்டார். ராஜாதி ராஜா ராஜா கம்பீர ராஜ் மார்த்தாண்ட...... பராக் பராக் பராக்


முக்கிய வீடியோ