உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் பேச்சு

கூட்டாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் பேச்சு

சென்னை: ''இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பு தான் இந்த கூட்டம்,'' என்று கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசினார். சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியதாவது: நாடு முழுவதும் இருந்து மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றாலும் முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி

நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான இந்த போராட்டத்துக்கு சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம், வெற்றியை நோக்கி பயணிப்போம். புதிய மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்தாண்டே கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

நிச்சயம் வெற்றி

1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் என்பது வடக்கு, தெற்கு இடையிலான மோதல் அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பு தான் இந்த கூட்டம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திரண்டுள்ள நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒன்றிணைந்திருப்பது தொடக்கம் தான்.

ஜனநாயகம்

திட்டங்களை வகுப்பது முன்னேற்றம். ஒன்றிணைந்து செயல்படுவதே வெற்றிக்கான வழி. அரசியலமைப்பு சட்டத்தை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் நாட்டின் பல்வேறு தலைவர்கள் திரண்டுள்ளோம். ஜனநாயகத்தை காக்க பல்வேறு மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் காக்கப்பட வேண்டும். கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Pollachi tamilan
மார் 22, 2025 22:24

என்னப்பா கமெடியெல்லாம் பண்ணுறாரு இந்த சிவா குமாரு , மேக தட்டுல அணை கட்டி தமிழ்நாடு க்கு ஒரு சொட்டு தண்ணி விடக்கூடாது சொன்னாப்பல . இப்ப என்னடானா கூட்டாட்சி பத்தி எல்லாம் பேசுறாரு. இவன் தமிழ்நாடு அரசியல்வியாதிகே பாடம் எடுப்பான் போல பெரிய ஆளு தான் .விளங்கிடும் ...


Veluvenkatesh
மார் 22, 2025 20:34

கூட்டாட்சிய பற்றி காட்டாட்சி நடத்தும் நீங்க கவலை படக்கூடாது kn-dcm? காவிரில ஒரு சொட்டு தண்ணீர் திறக்க முடியாது, ஆற்றை தடை படுத்த மேக தாது அணை கட்டியே தீருவோம்-இப்படியெல்லாம் கொக்கரித்து தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிவகுமார் இங்கு வர தகுதியற்றவர் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்திய அவரை அழைத்து வந்து, எங்கள் காசில் விருந்து வைக்கும் இந்த திராவிட கொள்ளை கும்பல் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.


Narasimhan
மார் 22, 2025 18:49

நாளைக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லையென்றால் பாஜகவில் சேர்ந்துவிடுவான்.


S. Venugopal
மார் 22, 2025 18:29

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பெருவாரியான மக்கள் வாழ்வாதாரர்த்திற்காக இடம் பெயர்ந்ததினாலும் தண்ணீர் பற்றாற்குறையால் விவசாய தொழில் வீழ்சியடைந்ததால் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கிராமப் பொருளாதார சரிவுகளினால் வேறு தொழிலுக்காக இடம் பெயர்ந்துள்ளதால் மக்கள் பிரதிநித்துவம் பொலிடிகல் பௌண்டரீஸ்களின் அடிப்படையில் இல்லாமல் மக்கள் தொகையின் அடிப்படையில் இருந்தால்தான் வளர்ச்சிக்கு நன்மைபயக்கும். ஒரு சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைவிற்கு மக்களின் இடப்பெர்ச்சி ஒரு முக்கிய காரணம் ஆகும். இதனால் ஏற்படும் சிறிய இம்பலன்ஸ்களை ராஜ்யசபா பிரதிநித்துவம் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.


Iyer
மார் 22, 2025 17:31

கொள்ளை அடிக்கும்போது தந்தனியாகத்தானே கொள்ளை அடித்தீர்கள். இப்போ மோதியின் ED கையும்களவுமாக உங்களை பிடிக்கும்போது கூட்டு ஆட்சி நினைவு வருகிறதோ?


vijai hindu
மார் 22, 2025 16:48

சேர்ந்து கொள்ள அடிக்கிறதுக்கா


Sowdarpatti Rayarpadi Ramaswamy
மார் 22, 2025 15:59

தொகுதி மறுவரையரை மாநில அரசுகளை கேட்டு செய்ய வேண்டிய அவசியம் சட்டப்படி மத்திய அரசுக்கு இல்லை. இது வரை காங்கிரஸ் காலத்தில் இப்படித்தான் மத்திய அரசு செயல்பட்டது என் காங்கிரஸ் துணை முதல்வர் சிவகுமார் அறியாரா ?


naranam
மார் 22, 2025 15:56

முதலில் காவேரி தண்ணீரை முழுமையாகத் தரவும். புதிய அணைகள் திட்டத்தைக் கிடப்பில் போடவும்.


Bala
மார் 22, 2025 14:47

GET LOST MR SIVAKUMAR. WE THE PEOPLE OF TAMILNADU STRONGLY OPPOSE THE PROPOSED CONSTRUCTION OF MEGADADU DAM


vijai hindu
மார் 22, 2025 14:22

எதுக்கு கூட்டா


முக்கிய வீடியோ