உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது

வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாகோடு பேரூராட்சி இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டிக்காட்டு விளை, பாகோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஜெபின். இவர் தனக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்து உள்ளார். இது தொடர்பாக கடந்த 19-06-2025 அன்று பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது இளநிலை உதவியாளர் விஜி, வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீஸ் கூறியபடி ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை நேற்று இளநிலை உதவியாளர் விஜியிடம் ஜெபின் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விஜியை கைது செய்தனர்.ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பேரூராட்சியில் எலக்ட்ரீசியன் மற்றும் பில் கலெக்டர் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

mynadu
ஜூலை 10, 2025 01:03

சென்னை தமிழ் நாடு ஹௌசிங் போர்டு அண்ணா நகர் ல இருக்கு, அவங்க தப்பு பண்ணி கொடுத்த டாக்குமெண்ட் சரிபண்ண லஞ்சம் கேட்குறாங்க என்ன கொடுமை சார். அதுல கிருஷ்ணன் கிளெர்க் வினோத் கொஞ்சம் கூட அசராம யார் கிட்ட வேணும்னாலும் சொல்லு என்று லஞ்சம் கேட்பாங்க


Bhaskaran
ஜூன் 24, 2025 05:15

இவளை டிஸ்மிஸ் பண்ணவேண்டும்


Kokilaa
ஜூன் 24, 2025 04:45

நானும் அப்ளை செய்துவிட்டு என்னுடைய மனுவும் நிலுவையில் உள்ளது எல்லா அரசு அலுவலங்கங்களிலும் எல்லாலோரும் இப்படி தான் இருக்கிறாரகள் பெரும்பாலும் .


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 04:09

லஞ்சத்தில் திளைப்பது லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல - கொடுப்பவர்களும்தான். அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே நாடு திருந்தும்.


Swaminathan S
ஜூன் 23, 2025 23:00

சென்னை 155 ஜோன், ராமாபுரம் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அனைவர் பெயரையும் கோபால் என்று எக்செல் இல் பதிவிட்டு விட்டார்கள், சென்னை கார்பரேஷன் மாறும்போது. இதை மாற்ற செலவாச்சு.. என்ன சொல்ல. ஒருவர் செய்த வேலையை சரி பார்க்க மேல் அதிகாரி துப்பில்லை


அப்பாவி
ஜூன் 23, 2025 22:10

லஞ்சம் வாங்குறதுக்கு எல்லா வழி வகைகளையும் செஞ்சு குடுக்கும் கேவலமான விதிமுறைகள் இந்தியாவுலதான் இருக்கு. என்னோட ரயில் பேப்பர் டிக்கெட் தொலைஞ்சு போனதுக்கு 150ரூவா ஃபைன் கட்டணும்னு விதி சொல்லுது. ஆனா , அந்த ரயில்வே கிளார்க் முழுத் தொகையும் வசூலிச்சு கிட்டத்தட்ட 600 ரூவா ஆட்டை.யாருகிட்டே சொல்லி அழுவறது?


Anantharaman Srinivasan
ஜூன் 23, 2025 21:12

அரசு ஊழியர் அனைவருக்கும் ஆண் பெண் பேதமின்றி லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்க ஆசைவந்து விட்டது. திராவிட மாடல் பெரிய தலைகளே பெரிய தொகை வாங்கும் போது, நாம் சிறிய அளவில் லஞ்சம் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்ற குருட்டு தைரியத்தில் வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். இது போன்றவர்களை பணி நீக்கம் செய்து retirement benifts முழுவதும் அனுபவிக்க விடாமல் தண்டனை கொடுத்தால் மட்டுமே பயப்பட்டு நேர்மையாக நடப்பர்.


somasundaram alagiasundaram
ஜூன் 23, 2025 19:41

இவர் தான் நீட் ஊழல் பற்றி பேசுகிற திராவிட மாடல்..


Ramkumar Ramanathan
ஜூன் 23, 2025 19:39

every day these kind of news is happening in tamilnadu, what is the stand of the govt employees asan, who are all vehemently insisting for salary hike in every meeting. what is the stand of the political parties in this matter?


Ramesh Sargam
ஜூன் 23, 2025 19:38

தமிழகத்தில் இப்படி தினம் தினம் லஞ்சம் வாங்கும் தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சிக்குகிறார்கள். அவர்கள் கைதானபிறகு தண்டிக்கப்படுகிறார்களா, அல்லது ஜாமீனில் மீண்டும் பணியில் சேர்ந்து, பணியில் தொடர்கிறார்களா? மேலும் இதற்கெல்லாம் தமிழக முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார், அதாவது இப்படி அவர் ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதே, அதை முற்றிலும் ஒழிக்க, அல்லது ஓரளவாவது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறாரா? அல்லது இதெல்லாம் எதிர்கட்சியினரின் வெறும் புரளி என்று எப்பொழுதும்போல அறிக்கைவிட்டு தப்பித்துக்கொள்வாரா?


Raghavan
ஜூன் 24, 2025 01:12

முதல்வருக்கு தமிழ் எழுத படிக்காத தெரியாது அப்படியே படித்தாலும் தப்பு தப்பாக தான் படிப்பார். அப்படியே எழுதினாலும் வடிவேலு ஒரு படத்தில் கொள்ளை அடிக்க வந்திருக்கிறோம் என்பதை வெள்ளை அடிக்க வந்திருக்கிறோம் என்று எழுதியிருப்பார். அதுபோல் தான் இவரும் தாய்மொழி தெலுங்கு. வீட்டில் பேசுவது எல்லாம் தெலுங்கில் தான் என்று சொல்லுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை