உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் காவலர் பாலியல் புகார்; ஐ.பி.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்

பெண் காவலர் பாலியல் புகார்; ஐ.பி.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐபிஎஸ் அதிகாரி) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக டிஐஜி அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். ஐபிஎஸ் அதிகாரி. இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி இடம் புகார் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=osqkacn0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனடிப்படையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

K.n. Dhasarathan
பிப் 13, 2025 17:31

சபாஷ், சஸ்பெண்ட் தான் சரியான தண்டனை, சும்மா இடம் மாறுதல், காத்திருப்போர் பட்டியல் என்பதெல்லாம் கண்துடைப்புதான், சரியாக சொல்வதானால், அவர்களை ஊக்கப்படுத்துவது போல, சும்மா இருந்தே சம்பளம் வாங்கு என்றால் என்ன அர்த்தம் ? வேறு இடம் சென்றால் அங்கும் இதே நச்சு வேலைகள் தொடரும், வழக்கு முடியும்வரை சஸ்பெண்டில் வையுங்கள், மற்றவர்களுக்கும் புத்தி வரும்.


Ram pollachi
பிப் 13, 2025 16:21

அடிச்சு பிடிச்சு நாலு கருத்து எழுதுவதற்குள் அரை கிலோ பக்கோடா காலியாகிவிடும்... குற்றம் செய்யும் போது படபடப்பு மற்றும் இன்பம், அது முடிந்த பிறகு துக்கம் மற்றும் அவமானம் ! ஆவதும் அழிவதும் பெண்ணாலே!


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 13, 2025 14:56

முகரக்கட்டையை பார்த்தாலே தெரியுது.


Gopi
பிப் 13, 2025 14:01

அவன் செய்த தவறுக்கு பனிஷ்மென்ட் கிடைத்து இருக்கிறது. இதில் எங்கே இந்து மதம் வந்தது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 12:28

நிஜம் என்று நிரூபணம் ஆனால் இவன் ஒரு இழிவான இந்து என்று எழுதுவீர்களா அல்லது திராவிட என்று எழுதுவீர்களா? ஒருவேளை இவன் முஸ்லீமா இருந்திருந்தால், அவரவர் இங்கே தீர்ப்பே எழுதியிருப்பார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 13, 2025 12:54

ஒருவேளை இவன் முஸ்லீமா இருந்திருந்தால், சஸ்பெண்டே ஆகியிருக்க மாட்டானே


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2025 13:49

முஸ்லிம்கள் என்றால் பிராம்மண தமிழில் எழுதும் வைகுண்டுவுக்கு அவ்வளவு பாசமா ?


KavikumarRam
பிப் 13, 2025 14:51

இவன் முஸ்லிமா இருந்திருந்தா அந்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார்.


vadivelu
பிப் 13, 2025 20:30

அவன் செய்த காரியம் பார்த்தால் தமிழனாக தெரியவில்லையே, ....


Ramesh Sargam
பிப் 13, 2025 12:11

சஸ்பெண்ட், வேறு இடத்திற்கு மாற்றம் இதெல்லாம் ஒரு தண்டனையே அல்ல. விசாரணை நடத்தி, தவறு செய்திருக்கும் பட்சத்தில், தவறுக்கு ஏற்றமாதிரி அவர் தண்டிக்கப்படவேணும். அதுவும் விரையில் நடந்தேறவேண்டும். தாமதம் ஆக ஆக சாட்சிகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் விசாரணை முடியும் வரைக்கும் எந்த அரசியல் கட்சியும் அவருக்கு அந்த கட்சியில் சேர அனுமதி மறுக்கவேண்டும்.


Kasimani Baskaran
பிப் 13, 2025 11:45

அந்த சார் யார் என்று தெரிய முயன்றிருப்பாரோ?


Laddoo
பிப் 13, 2025 11:31

எங்கோ இடிக்குது. உண்மையான விசாரணை தேவை. விசாரணையே இல்லாம சஸ்பெண்ட் சரியல்ல.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 12:26

, உலகம் முழுக்கவே "suspension, pending enquiry" அதாவது , விசாரணையே இல்லாம இல்ல, விசாரணைக்காக சஸ்பெண்ட்தான் "முதல் நடவடிக்கை".


S.kausalya
பிப் 13, 2025 11:25

கேட்பவர்களுக்கு சொல்லுங்கள் இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று. வேலியே பயிரை மேயும் ஆட்சி என்று.


Kalyanaraman
பிப் 13, 2025 10:46

ஒரு புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய முடியும் எனில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் மாதக்கணக்கில் இருந்து பிணையில் வெளிவந்த மாநில அரசு மந்திரி மட்டும் எப்படி மீண்டும் அதே பதவியில் இருக்கலாம். நம்ம நாட்டுல தான் ஆளாளுக்கு ஒரு சட்டம் ஒரு ஒரு நீதி. ஆண்மையற்ற சட்டங்களை நீக்கி விட்டு வீரியமான சட்டங்களுடன் கடுமையான தண்டனையும் புகுத்தி விரைவாக விசாரணை முடிக்கும் வகையில் நீதிமன்ற நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.