உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது கடலூரில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணிக்கு ஓட்டளிக்காததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கோமதி (45) என்பவர்களுக்கும், திமுக பிரமுகர்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளர் கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=870bp4te&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வழக்குப்பதிவு

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக திமுக.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக' செய்தி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பெண் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து தெரிவித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

கஞ்சா தலைநகர்

அண்ணாமலை 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது: தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல் துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் போலீசாருக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், 3 ஆண்டுகளாகக் கோட்டைவிட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
ஏப் 23, 2024 16:58

இவருடைய ஆணவப் பேச்சுக்கு இது போதாது!


Azar Mufeen
ஏப் 22, 2024 22:33

மத்தியபிரதேசத்தில் கஞ்சாபோதையில் வாயில் மிளகாய்ப்பொடியை வைத்து பெவிகால் ஓட்ட வைத்து மனைவி சித்ரவதை. அப்போ மத்தியபிரதேசம் கஞ்சா தலைநகரம் இல்லையா அண்ணாமலை அவர்களே


Kumar Kumzi
ஏப் 23, 2024 00:13

மத்திய பிரதேசத்துக்கு ஏன் போற உங்க டுமீல் நாட்டுலஜாபர் சாதிக் பத்தி கொஞ்சம் சொல்லு


பேசும் தமிழன்
ஏப் 23, 2024 08:00

அதை செய்ததது ஒரு பாலைவன மூர்க்கன்.... மத்திய பிரதேச அரசு அந்த குற்றவாளியின் வீட்டை இடித்து... நடு தெருவில் நிறுத்தி விட்டது... ஆனால் இங்கே கஞ்சா குற்றவாளிக்கு விருது கொடுகிறார்கள்.


Anand
ஏப் 22, 2024 22:06

வாய் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு, கைப்பூட்டு ரெண்டும் அவசியம்


Siva Subramaniam
ஏப் 22, 2024 22:04

எது எப்படியோ மோடியோ அண்ணாமலையோ ஜெயிக்கக்கூடாது , ஜெயித்தால் இதுவரை நடந்த எல்லா ஊழல்களும் வெளிச்சத்திற்கு வரும்


Priyan Vadanad
ஏப் 22, 2024 21:31

Duruvesarக்கு கர்த்தர் மீது எவ்வளவு பாசம் Duruvesar என்கிற இவரது பெயரிலேயே ஏசு இருப்பது மறைமுகமாக தெரிகிறது இவர் கர்த்தரின் சீக்ரட் சீடர் ஆகவேதான் மற்றவரையும் இவர் கர்த்தரின் சீடராக நினைக்கிறார் ரெட்சிப்புக்கு நீர் தூரமில்லை திருஏசுவரா


முருகன்
ஏப் 22, 2024 20:33

தமிழகத்தில் எது நடந்தாலும் இவர் திமுகவை தொடர்பு படுத்தி பேசுவார்


sridhar
ஏப் 22, 2024 21:26

இல்லையே , நல்லது நடந்தால் திமுகவை யாரும் காரணமாக காட்ட மாட்டார்களே


பேசும் தமிழன்
ஏப் 22, 2024 20:18

இவர்கள் கொலை செய்பவர்கள்.... குண்டு வைப்பவர்கள்.... கஞ்சா விற்பவர்களை பிடிக்க முடியாமல்.... அதை சுட்டிக்காட்டும்.... அண்ணாமலை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தான் தமிழக காவல்துறை வேலையா... அடுத்த உள்துறை அமைச்சர் அண்ணாமலை அவர்கள் தான்.... அப்போது இருக்கு உங்களுக்கு எல்லாம் கச்சேரி!!!


Venkataraman
ஏப் 22, 2024 19:38

இந்த மாதிரி பொய் வழக்குகளை போட்டு பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் அண்ணாமலை அவர்களிடம் எடுபடாது இந்த தேர்தல் முடிந்தவுடன் அண்ணாமலைதான் உள்துறை அமைச்சராக வருவார் திமுக அமைச்சர்களை சிறையில் தள்ளுவார்


Narayanan Muthu
ஏப் 22, 2024 20:24

நரிக்கு நாட்டாமையா


Duruvesan
ஏப் 22, 2024 19:37

ஆக விரைவில் அண்ணாமலையை விடியல் சார் குண்டர் சட்டத்தில் அர்ரெஸ்ட் செய்வார் ,வருங்கால பிரதமர் கர்த்தரின் சீடர் வாழ்க


Priyan Vadanad
ஏப் 22, 2024 21:32

கர்த்தரின் கிருபையால் அவரின் ரகசிய சீடரான உமது எண்ணம் நிறைவேற வாழ்த்துகிறேன்


Chandran,Ooty
ஏப் 23, 2024 07:54

ஏலே நீங்க ரெண்டு பயலுமே கிரிப்டோக்கள் என்பது தெரியும் அங்கிட்டு ஓரமா போய் விளையாடுங்க.


Shankar
ஏப் 22, 2024 19:18

வழக்கு போட்டவன் வசமா அண்ணாமலை கிட்ட மாட்டிக்கிட்டான்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ