இலங்கை அமைப்புடன் பியோ ஒப்பந்தம்
கோவை:இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான பியோ மற்றும், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையான என்.சி.இ., ஆகியவற்றுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரித்து, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வாங்குவோர் - விற்போர் சந்திப்புகளில் பங்கேற்பது, சந்தை நுண்ணறிவு பரிமாற்றத்தை எளிதாக்குவது, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியன, அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'பியோ' தலைமைச் செயல் அதிகாரி அஜய் சகாய், இலங்கை துாதரக முதன்மைச் செயலர் ராம்பாபு, என்.சி.இ., தலைவர் இந்திரா கவுசல் ராஜபக்ச உள்ளிட்டோர் பங்கேற்றனர்.