உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு

கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் நடக்கிறது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன; 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர மற்ற பானைகளை பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர். ஒரு பானையின் மேற்புற வெளிப்பகுதியில், இரண்டு வட்ட கோடுகள்,கீழ்பகுதியில்மூன்று வட்ட கோடுகள் காணப்படுகின்றன.மற்றொரு பானையின் வெளிப்புற நடுப்பகுதியில் மூன்று வட்ட கோடுகளின் நடுவே இலைகள் வரையப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சுடுமண் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளதால் பானைகளிலும் அச்சுகளை வைத்து வரைந்திருக்கலாம்.கீழடி அகழாய்வில் கிடைத்த ஒரு சில பானைகள், அடர்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. எனவே, இதில் குறிப்பிடத்தக்க பொருட்கள் வைத்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
அக் 07, 2024 10:28

பயனில்லாத பழம்பெருமை பேசுவது பெருங்காயம் வைத்திருந்த பாண்டம்.வாசனை மட்டுமே மிச்சம்.தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர். பெருமையாகக் கருதுகின்றனர். அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர். ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல், பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர். விடாமல் நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை


Sridhar
அக் 07, 2024 13:24

தவறு. நம் பழம்பெருமைகளை மறந்ததால்தான் இன்று ஒன்றுக்கும் உபயோகமில்லாத ஈனப்பிறவிகளை பெருமைமிகு தலைவர்களாக கட்டமைக்கிறார்கள். நாளடைவில் அதுவே சரித்திரம் ஆகிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. கீழடி ஆராய்வில் விநாயகர் சிலை வெளிவரும்போது, ஈனப்பிறவிகளின் அதிர்ச்சிகளை காண்பதற்கு இப்போதே ஆவலாக உள்ளோம். தமிழகம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பூமி என்பதை நிலைநாட்டும்வரை பழம்பெருமை பேசிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.


venugopal s
அக் 07, 2024 17:49

ராமாயணம் மகாபாரதம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது!


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 07, 2024 09:43

எவ்வளவு நாட்கள் இப்படி பள்ளம் தோண்டி பானை, சட்டி, வளையல், சங்கு, கத்தி, ஈட்டி என்று எடுக்கப் போகிறார்கள்? ஒருசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை ஆங்காங்கு கிடைத்த இயற்கை பொருட்களை வைத்து மக்கள் இதுபோன்ற உபகரணங்களை உருவாக்கி உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தினர். இப்படி ஒன்றுக்கும் உதவாத ஆராய்ச்சிகள் தேவையற்ற ஆணிகள்.


MP.K
அக் 07, 2024 09:06

முன்னோர்களை நினைத்து வியக்கிறேன் இங்கே தமிழ் மண்ணில் மக்களின் வாழ்வும் வளமும் தொல்லியல் ஆய்வில் தெரிகின்றன வாழ்வோம் வளமுடன்


Jysenn
அக் 07, 2024 07:58

Keeladi is another scam by the two diravida parties.


சமீபத்திய செய்தி