மேலும் செய்திகள்
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
06-Oct-2025
சென்னை: தடய அறிவியல் துறையைச் சேர்ந்த, விரல் ரேகை பிரிவு நிபுணர்கள் உதவியுடன், திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான 56 வழக்குகளில், 42.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கடந்த மாதம் மீட்கப்பட்டு உள்ளன. போலீசார் கூறியதாவது: தமிழகம் முழுதும் பதிவான திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான வழக்குகளில், துப்பு துலக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த, விரல் ரேகை நிபுணர்கள் உதவியுடன், 56 வழக்குகளில், 42.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில், நகை, பணம் திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பாக, 2,130 வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு உள்ளது. இவற்றில், 13.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
06-Oct-2025