வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீயை அணைத்தபிறகு, அந்த ஐந்தாவது, ஆறாவது தளங்கள் மக்கள் குடியிருக்க தகுதியா என்று சோதித்து தகுதி என்றால் மக்கள் குடியிருக்க அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முற்றிலும் புனரமைக்கப்பட்டு அனுமதி கொடுக்கவேண்டும்.
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 5வது மாடியில் உள்ள வீட்டில், மிக்சியை பயன்படுத்த சுவிட்ச் ஆன் செய்தபோது தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மிக்சியில் ஏற்பட்ட தீ, வீடு முழுவதும் பரவியதால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. 5ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ, 6ஆவது தளம் என அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது.இந்நிலையில் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. தகவல் அறிந்து, மயிலாப்பூர், தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள், சம்பவ நடைபெற்ற இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5வது மற்றும் 6வது மாடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கரும் புகையால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ள அனைத்து வாகனங்களையும் எடுக்குமாறு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் மேலே செல்ல முடியாமல் புகை அதிகமாக வருவதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்,
தீயை அணைத்தபிறகு, அந்த ஐந்தாவது, ஆறாவது தளங்கள் மக்கள் குடியிருக்க தகுதியா என்று சோதித்து தகுதி என்றால் மக்கள் குடியிருக்க அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முற்றிலும் புனரமைக்கப்பட்டு அனுமதி கொடுக்கவேண்டும்.