உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடை கடையாய் ஏறி நோட்டு போட்டு தீபாவளி வசூல்... வசமாய் சிக்கிய தீயணைப்புத்துறை அலுவலர்கள்!

கடை கடையாய் ஏறி நோட்டு போட்டு தீபாவளி வசூல்... வசமாய் சிக்கிய தீயணைப்புத்துறை அலுவலர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: காரைக்குடியில் ஒவ்வொரு கடையாக ஏறி தீபாவளி வசூல் செய்து பணத்தை பைக்கிலும், அலுவலக அறையிலும் பதுக்கி வைத்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் வசமாக சிக்கி உள்ளனர்.தீபாவளி என்றால் புதுத்துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் என அமர்க்களம் களைகட்டும். அதே நேரம் தீபாவளி வசூல் என்று ஒரு கூட்டம் ஆங்காங்கே கிளம்பிவிடும். அவர்களை கட்டம் கட்டுவதற்கு அதிகாரிகள் தனித்தனியாக அனைத்து அரசு அலுவலகங்களில் ரெய்டு சென்று அதிரடி காட்டுவர்.அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்புத்துறை அலுவலகத்திலும், அலுவலர்களிடமும் நடைபெற்ற சோதனையில் கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கமான நடவடிக்கை என்று கூறினாலும், அப்போது நடந்த நிகழ்வுகள் வேறு ரகமாக இருக்கிறது. அதுபற்றி போலீசார் தரப்பில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு; வருவாய்த்துறை அதிகாரி காசிநாததுரை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரில், காரைக்குடி தீயணைப்புத் துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.புகாரை பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது, தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் என்பவர் லஞ்ச பணத்துடன் பைக் ஒன்றில் வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக, காரைக்குடி அரசு மருத்துவமனை அருகே நின்று அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். அப்போது அவ்வழியாக வந்த செல்வத்தை பிடித்து சோதனை நடத்தினர். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு தீயணைப்புத்துறை அலுவலகம் சென்றுள்ளனர். அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனையிட்டு பார்த்த போது சீட்டின் அடியில் எவ்வித ஆவணங்கள் இன்றி 60 ஆயிரம் ரூபாய் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து எடுத்தனர்.கத்தை, கத்தையாக இருந்த பணத்துடன், யாரிடம் எவ்வளவு வசூல், பணம் தந்தவர்களின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்ட 2 நோட் புக்குகளையும் கைப்பற்றினர். அந்த நோட் புக்குகளில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் வண்ணம், தீயணைப்புத்துறை அலுவலகத்தின் முத்திரையை பதிவிட்டு வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.தொடர் விசாரணையில், தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர் உத்தரவின் பேரில் கடைவீதி, முக்கிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்குச் சென்று நோட்டு போட்டு தீபாவளி மாமூல் வசூலித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் வைத்திருந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீயணைப்பு நிலையத்தில் இருந்த மற்ற அலுவலர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஓய்வு அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.64,000த்தை கைப்பற்றினர். மேலும், அலுவலக அறையில் இருந்த கணினி மேஜையில் யார், யாரிடம் எவ்வளவு தீபாவளி வசூல், எவ்வளவு பணம் வந்தது என்ற விவரங்கள் எழுதி வைத்திருந்த நோட்புக் ஒன்றையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.வழக்கமாக தீபாவளி வசூல் என்பது ரகசியமாக அல்லது யாருக்கும் புரியாமல், தெரியாமல் இருக்கும் வகையில் வசூலிக்கப்படுவது உண்டு. ஆனால், காரைக்குடியில் மேல் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கர்மமே கண்ணாக கடை, கடையாக ஏறி, பணம் வாங்கி அதை யார் எவ்வளவு தந்தனர் என்ற விவரங்களை பொறுப்புடன் நோட்புக்கில் பதிவிட்டு வசூல் செய்துள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறையினரை மட்டும் அல்ல, வெகுஜனத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Mayakannan Kannan
அக் 27, 2024 10:02

இவர்கள் ஆபத்து காலதில் உதவுகிறார்கள் பரவாயில்லை.


KAMARAJ M
அக் 26, 2024 21:39

காலம் காலமாக நடப்பது தான்.


Ramesh Sargam
அக் 26, 2024 20:56

தீயணைப்பு துறை அலுவலர்கள் மக்களிடம், வியாபாரிகளிடம் என்ன சொல்லி லஞ்சம் கேட்பார்கள், லஞ்சம் வாங்குவார்கள்.


Anantharaman Srinivasan
அக் 26, 2024 20:51

இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் ஒன். மந்திரிகள் MP MLA கவுன்சிலர்கள் கட்சி வட்டங்கள் வசூலிக்கும் போது நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று கிளம்பிவிட்டனர். சென்னை,. புரசைவாக்கம், தி நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோட்டிலுள்ள கடைகளில் எத்தனை கோடி வசூலாச்சோ..??


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 21:48

நீங்க சரியான கிணற்றுத்தவளை தான். இங்கே மும்பை வந்து பாருங்க. போலீஸ், தீயணைப்புத் துறை, மும்பை கார்போரேஷன் என்று ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு கடையிலும் எப்படி வசூல் செய்கிறார்கள் என்று நேரில் பார்த்திருக்கிறேன். அரசுத் துறைகள் போக மேலும் சில லோக்கல் தாதா க்களின் ஆட்கள் வேற வசூல் பண்ணுவார்கள். இந்தியாவிலேயே நம்பர் 1 தமிழ் நாடு என்று உளறினால் நம்புவதற்கு எல்லாவனும் கேனய்யனா??


Jysenn
அக் 26, 2024 20:35

This department is one of the worst departments, if not the worst, as far as corruption and bribery are concerned surpassing all other notorious departments in sight. But most people dont know this singular fact about this corrupt department.


பாமரன்
அக் 26, 2024 20:17

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கோத்தகிரியில் அம்மிணிங்க எவ்ளோ நேக்கா ஜிபே போன்பே மூலம் வசூல் பண்றாங்க... நீங்க என்னடான்னா இன்னும் நாற்பது பக்க நோட்ட தூக்கிட்டு அலையறீங்க... இதை மாதிரி ஆட்களால் தான் தமிழ் நாடு முன்னேறலைன்னு எதிரி கட்சியினரின் விமர்சனம் வருது... என்னத்த சொல்ல...


Rasheel
அக் 26, 2024 18:28

இவர்களுக்கு நல்ல சம்பளம் வரும்போது, இப்படி ஒரு வேலை தேவையா?


ramesh
அக் 26, 2024 18:16

வணிக வரித்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்பட அனைத்து துறையனரும் வியாபாரிகளிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்து வருகிறார்கள் .இதில் பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருவன் .அதிலும் வணிக வரித்துறை நாங்க ரெகுலர் ,நாங்கள் என்போர்ஸ்மென்ட் என்று 2 ஆக செட் ஆக கேவலமாக வந்து மிரட்டுவார்கள் . தொழில் நடத்த வேண்டுமே என்பதால் தான் இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது


என்றும் இந்தியன்
அக் 26, 2024 18:03

கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை ???அக்கிரமம் அநியாயம் திருட்டு திராவிட அரசின் ஸ்டேட்டஸ் என்ன???? இந்த தொகை எந்த மூலைக்கு??? அட்லீஸ்ட் ஒரு பத்து கோடி இருக்கவேண்டும்???


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 21:54

யாரோ நாலு firemen மாமுல் வாங்கறதுக்கும் திராவிட அரசு ன்னு எழுதறியே? இது என்ன இந்த வருஷம் புதுசாவா நடக்குது?? நல்ல வேளை அந்த தீயணைப்பு அதிகாரி இந்து. இதுவே அவர் வேற மதமாக இருந்திருந்தால் சாமி ஆடியிருப்பியே


என்றும் இந்தியன்
அக் 26, 2024 18:03

கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை ???அக்கிரமம் அநியாயம் திருட்டு திராவிட அரசின் ஸ்டேட்டஸ் என்ன???? இந்த தொகை எந்த மூலைக்கு??? அட்லீஸ்ட் ஒரு பத்து கோடி இருக்கவேண்டும்???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை