உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் அருகே தரைமட்டமான பட்டாசு ஆலை: பெண் பலி: 7 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே தரைமட்டமான பட்டாசு ஆலை: பெண் பலி: 7 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விருதுநகர் கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடி சத்திய பிரபு பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.கட்டடங்கள் தரைமட்டமாகின. விருதுநகர் அருகே கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடியில் சத்திய பிரபு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இன்று காலையில் வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் திடீரென ஏற்பட்ட உராய்வினால் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=94km24zh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீ எரிந்து புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.விபத்து நடந்த ஆலையில் இருந்த ஐந்து அறைகள் தரைமட்டமாகின. பெண் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இராம தாசன்
பிப் 05, 2025 23:14

இதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் - சீன பட்டாசுக்கு வழி வகுக்க இந்த மாதிரி விபத்துகளை ஏற்படுத்துகிறார்களோ ?


Gokul Krishnan
பிப் 05, 2025 20:01

மிக வேதனை அளிக்கிறது எத்தனை முறை பட்டாசு ஆலை விபத்து நடக்கிறது நடந்து கொண்டு இருக்கிறது ஒவ்வொரு முறையும் வெறும் ரெண்டு லட்சம் ரூபாய் உடன் அந்த உயிரின் விலை இதை தடுக்க ஆட்சியாளர்கள் நீதி மன்றம் எதுவும் கடுமையான விதிகளை பின்பற்றுவது கிடையாது இதுவே ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் இரவோடு இரவாக சாலைக்கு வெள்ளை கொள்ளை அடித்து சரி செய்யபடுகிறது


Subramanian
பிப் 05, 2025 18:52

கொடூரமான சம்பவம். இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதில் சம்பந்தபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


புதிய வீடியோ