உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,

2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க.,வால் பறிபோன தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் மீட்டுத் தருவேன். இதுவே சட்டசபை தேர்தலுக்கான முதல் வாக்குறுதி,'' என அ.தி.மு.க.., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுக.,வைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்துவிட்டது' என்கிறார்.ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாதுரையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்சன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழகத்தை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழக மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!திமுக-வால் பறிபோன தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!இதுவே, தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி! இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Pascal
ஜூன் 28, 2025 13:29

முதல் வாக்குறுதி புல்லரிக்குது. இனி என்ன கருமத்தை எல்லாம் வாக்குறுதின்னு சொல்லப்போறாரோ


Palanisamy T
ஜூன் 27, 2025 14:44

முதல் வாக்குறுதியை சொல்லிவிட்டீர்கள். இப்போது இரண்டாவதைச் சொல்லுங்கள் . பறிப் போன தீவை உங்களால் மீட்க முடியுமா? ஏதோ கருணாநிதியே முன் வந்து தீவை கொடுத்ததுப் போல் பேசுகிண்றீர்கள். வல்லரசு நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் சீனா போன்ற நாடுகளுக்கு எங்கு எங்கோ தீவுகளை வைத்துக் கொண்டு படைவலிமைக் காட்டி உரிமைக் கொண்டாடுகின்றாரகள். ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான இந்திய நாட்டை சேர்ந்த ஒரு தீவை கடல் வளத்தோடு சேர்த்து இன்னொரு நாட்டிற்கு ஒன்றிய அரசு சும்மா கொடுக்கின்றார் களென்றால் என்ன அர்த்தம் தமிழகமே முன்வந்து கொடுத்தாலும் மத்திய அரசு முடியாதென்று ஏன் தடுக்கவில்லை. தமிழகம் முன்வந்து தீவை கொடுப்பதற்கு என்றும் பைத்தியக்காரர்களா? நாடாளுமன்ற அனுமதியின்றி இந்திய மண்ணை மற்றவர்களுக்கு கொடுக்கின்றார்களென்றால் ஒன்றிய அரசு செய்தது தவறுதானே. ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இந்த நிர்வாக விதிமுறைகள், நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டங்கள் இவையெல்லாம் தெரியாதா?


சாமானியன்
ஜூன் 27, 2025 08:03

எடப்பாடியாரே! ஸ்டாலின், டி.ஆர்.பாலு மாதிரி போலி வாக்குறுதிகளைத் தராதீர்கள். அதிமுக என்னைப் பொருத்த அளவில் எல்லாரையும் அனைத்துச் செல்லும் கட்சி. பிராமணர்கட்கும் சீட் தாருங்கள். திராவிட மாடல் ஒழிய வாழ்த்துக்கள்.


UDHAYAKUMAR MADHAPPAN
ஜூன் 27, 2025 07:28

நீங்கள் என்ன பேசினாலும் சரி அம்மாவை போல் தைரியம் இல்லை உங்களுக்கு. அம்மா இருந்திருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்திருக்குமா? மானமுள்ள ஈனமுள்ள எந்த தமிழனும் மறக்கமாட்டான். தமிழினத்துக்கு நடந்த கொடுமையில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை


தாமரை மலர்கிறது
ஜூன் 27, 2025 00:42

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளை அமித் ஷா விரைவில் முறைப்படி அறிவிப்பார்.


Kulandai kannan
ஜூன் 26, 2025 23:18

அரசின் வருவாயை எப்படி பெருக்குவீர்கள் என்று சொல்வது நலம்.


திகழ்ஓவியன்
ஜூன் 26, 2025 22:58

அய்யா கட்ச தீவு 10 வருடம் இருக்கும்போது மீட்கவில்லை , இப்போ இருப்பது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் , இதை செய்ய அவர்களிடம் பெர்மிஸ்ஸின் வாங்கிட்டீங்களா


Palanisamy T
ஜூன் 27, 2025 04:33

ரொம்ப தெளிவாக சரியாக சொல்லி விட்டீர்கள். அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் என்று அதிமுக வை பாராட்டியது நல்ல தொடக்கம். அதிமுக வினர் அண்ணாதுரையை தொலைத்து விட்டார்களா அல்லது முற்றாக மறந்து விட்டார்களா? பாஜக வையே நம்ப முடியவில்லை, இப்போது அமித்ஷா வை மட்டும் எப்படி நம்ப முடியும் ?


Arachi
ஜூன் 26, 2025 21:56

எடப்பாடி அன்றோ பரிதாபம். இவருக்கு ஒரே இருந்த திறமை அதிமுகவை உடைத்தது மற்றும் பிஜேபியிடம் தாரை வார்த்தது.


Arachi
ஜூன் 26, 2025 21:51

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்த எடப்பாடி. முதலில் பிஜேபி உங்களுக்கு எத்தனை இடம் தர்றாங்கன்னு பாருங்க...


arumugam mathavan
ஜூன் 26, 2025 21:40

வெற்றி பெற்று ஆட்சிக்கான வழியை பாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை