உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,விடம் இருந்து முதலில் அ.தி.மு.க.,வை மீட்டெடுங்கள்: பழனிசாமிக்கு உதயநிதி அறிவுரை

பா.ஜ.,விடம் இருந்து முதலில் அ.தி.மு.க.,வை மீட்டெடுங்கள்: பழனிசாமிக்கு உதயநிதி அறிவுரை

சென்னை: ''தமிழகத்தை மீட்போம் என சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, முதலில் பா.ஜ.,விடம் இருந்து, அ.தி.மு.க.,வை மீட்கும் வேலையை பார்க்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

பல கட்சிகள், பூத் ஏஜன்டு களை நியமிக்கவே சிரமப்படுகின்றன. ஆனால், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி நிர்வாகியை தி.மு.க., நியமித்துள்ளது. இந்தியாவில் எந்த கட்சியிலும், இளைஞர் அணியில் மட்டும், 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக இருந்தது கிடையாது. தி.மு.க., இளைஞர் அணி மீது, ஏதேனும் சின்ன தவறு கிடைத்து விடாதா என, எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் முதல் ஐந்து முதல்வர்களின் பட்டியலில், நம் முதல்வரின் பெயர் உள்ளது. இதை பொறுக்க முடியாமல்தான், மத்திய பா.ஜ., அரசு தொல்லை கொடுத்து வருகிறது; நிதி உரிமையை தொடர்ந்து பறித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என சொல்லி, ஹிந்தியை தமிழகத்திற்குள் திணிக்க பார்க்கின்றனர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளை, குறைக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய ஒரே தலைவர், முதல்வர் ஸ்டாலின். 'ஓரணியில் தமிழகம்' என்ற முன்னெடுப்பை, துவக்கி உள்ளார். இதில், 2 கோடி பேரை கட்சியில் இணைத்து உள்ளோம். மக்கள் சாரை சாரையாக, தி.மு.க.,வை தேடி வருகின்றனர். இதை பார்த்து, அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் பயம் வந்து விட்டது. அதனால் தான், பழனிசாமி எங்கு சென்றாலும், 'ஓரணியில் தமிழகம்' குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்; 'தமிழகத்தை மீட்போம்' என சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர், முதலில் பா.ஜ., விடம் இருந்து, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கும் வேலையை பார்க்க வேண்டும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவதற்கான போரில், தி.மு.க., இளைஞர் அணி முன் வரிசையில் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 27, 2025 18:12

பயமா இருக்கா உதய்யண்ணா.....???


V RAMASWAMY
ஜூலை 27, 2025 09:02

தோல்வி ஜுர பயமா?


R SRINIVASAN
ஜூலை 27, 2025 08:15

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போடவேண்டுமென்றால் 5 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் .1 தாலிக்கு தங்கம் என்ற ஜெயலலிதாவின் திட்டத்தை அறிவிக்க வேண்டும். 2.TASMAC கடைகளை மூடவேண்டும். 3. ஏழை மக்கள் பயனடைய நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும். 4. பெண்களையம் ,குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை சட்டசபையில் இயத்ரி அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 5 .வருடத்திற்கு 1O லக்ஷம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.


S.L.Narasimman
ஜூலை 27, 2025 07:34

அந்த ஆளாவது உங்க பொய் புரட்டு வாக்குறுதிகள், மற்றும் தமிழக வளர்ச்சி திட்டங்களில் விடியல் ஆட்சி என்ன செய்ததுன்னு மக்கள் நலம் சார்ந்ந கேள்விகளை மட்டும் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்க வக்கற்று சம்பந்தமில்லாமல் உளறிகொண்டிருக்கிறாய் .


pv, முத்தூர்
ஜூலை 27, 2025 07:17

துரைமுருகனை முதல்வராக்கி, குடும்பத்திடமிருந்து திமுகாவை மீட்கவும்.


D Natarajan
ஜூலை 27, 2025 06:38

இதெல்லாம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் 4 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் , நீட் ரகசியத்தை இப்போதாவது தெரிவிக்கவும்


ramani
ஜூலை 27, 2025 06:00

உங்ககிட்டேயிருந்து தமிழகத்தை முதலில் மீட்க வேண்டும். அதற்கு பாஜக துணை அவசியம் தேவை


Mani . V
ஜூலை 27, 2025 04:42

இவனெல்லாம் அறிவுரை சொல்லி கேட்க வேண்டிய நிலைமையில் நாடு இருப்பதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2025 04:21

தமிழக மக்கள் என்னவோ குடும்ப கொள்ளையர்களின் கூடாரத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுங்க என்று பழனிசாமியிடம் கேட்கிறார்களே


புதிய வீடியோ