உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை அடித்து துன்புறுத்துகிறார் நடிகர் சரவணன் மீது போலீசில் முதல் மனைவி புகார்

என்னை அடித்து துன்புறுத்துகிறார் நடிகர் சரவணன் மீது போலீசில் முதல் மனைவி புகார்

சென்னை:நடிகர் சரவணன், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து, தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக, அவரது முதல் மனைவி, போலீசில் புகாரளித்துள்ளார். சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகர் சரவணன். முன்னணி நடிகராக வலம் வந்த சரவணன், சூர்யஸ்ரீ, 53, என்பவரை காதலித்து 2003ல் திருமணம் செய்து கொண்டார். பின், 2019ல், ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து மவுலிவாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சரவணன் மீது முதல் மனைவி சூர்யஸ்ரீ, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், 'பல இக்கட்டான சூழ லில், சரவணனுக்கு நிதி உதவி செய்தேன். ஆனால், இப்போது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 'எனக்கு பராமரிப்பு தொகையாக, 40 லட்சம் ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி வருகிறார்' என கூறியுள்ளார். சரவணன் அளித்த பேட்டி: என் வளர்ச்சி பிடிக்காமல், சூர்யஸ்ரீ இவ்வாறு செய்து வருகிறார். எனக்கும், இரண்டாவது மனைவிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். தற்போது வரை, எனக்கு சொந்தமான வீட்டில் தான் சூர்யஸ்ரீ வசித்து வருகிறார் . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை