| ADDED : டிச 30, 2024 12:08 AM
சென்னை: தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.தமிழக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், முதல்வரின் செயலர் உமாநாத், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செயல் இயக்குனர் ராஜேந்திர ரத்னு, உணவு பாதுகாப்பு கமிஷனர் லால்வீனா, கவர்ன ரின் செயலர் கிர்லோஷ்குமார் ஆகியோருக்கு, முதன்மை செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார். இவர்கள், 2001ம் ஆண்டு தமிழக பிரிவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் ராஜேந்திர ரத்னு, அயல்பணி அடிப்படையில் டில்லியில் பணிபுரிந்து வருகிறார்.