உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் தீக்கிரையான கார் ஐந்து பேர் காயம்

விபத்தில் தீக்கிரையான கார் ஐந்து பேர் காயம்

கொட்டாம்பட்டி : மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் முன்னே சென்ற லாரி திடீரென திரும்பியதால், பின்னால் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி தீ பிடித்தது. காரில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.சென்னை, கீழ்ப்பாக்கம் சுந்தரராஜன் 53, தனியார் நிறுவன மென்பொறியாளர். மதுரையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார். சுந்தரராஜன் ஓட்டினார். காரில் மனைவி சங்கேஷ்வரி 47, தம்பி மாரி 22, மகன் விஜய் அபினாஷ் 18, மகள் பிரஜனா 15, உடன் பணித்தனர். இரவு கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி விலக்கருகே சென்ற போது முன்னாள் மேலுார் -நத்தத்திற்கு சென்ற வைக்கோல் லாரி டிரைவர் லாரியை திடீரென திருப்பினார். அதனால் சுந்தரராஜன் லாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பவே கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பள்ளத்தினுள் இறங்கியது. இதில் கார் தீ பிடித்தது. காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் காரிலிருந்து இறங்கினர். கார் முழுவதும் எரிந்தது. காயம்பட்டவர்களை போலீசார் மேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி