உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யுங்க!

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யுங்க!

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யுங்க! மதுரை மாவ ட்டம், மேலுார் மேற்கு ஒன்றிய அ.ம.மு.க., முன்னாள் இணை செயலர் சேகரனின் மகன் ராம்பிரகாஷ், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் அருகே நடந்த சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் வாலிபரை அடித்துக் கொன்ற குற்றவாளிகள் அனைவரையும், காவல் துறையினர் கைது செய்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே உள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி தர வேண்டும். தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க. ,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
செப் 21, 2025 09:01

20 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளதா இல்லையா? காண்பதே அரிதாக உள்ளதே. யாராவது நாட்டிலுள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் சகோதரர் தினகரன் அவர்களின் முதலாம் கட்டளை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை