உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்

ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலத்துக்கு செல்லும் இணைப்புச்சாலை, இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் உள்வாங்கியது. பாலம் திறப்பு விழாவுக்கு முன்னதாகவே, சாலை உள் வாங்கியது ஊர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் அருகே, கெடிலம் ஆற்றின் குறுக்கே, ஆளூர் - மொகலார் இடையே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில், பாலத்துக்கு செல்லும் இணைப்புச்சாலை, மண் இறங்கி உள் வாங்கியது. மேம்பாலம் கட்டுமானப்பணி தரமின்றி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சீரமைப்பு செய்த பிறகே பாலத்தை திறக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ravichandran K
மே 27, 2025 08:29

வருன பகவான் மீது வழக்கு போடாமல் இருந்தால் சரி


RAMESH
மே 19, 2025 18:37

திராவிட மாடல் ஆட்சியின் அவலங்கள்.... அடுத்த மழைக்கு பாலம் இருக்காது....இதற்கு முன்பு திருவண்ணாமலை அருகே இப்படி தான்....


என்றும் இந்தியன்
மே 19, 2025 17:24

ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம் இணைப்புச் சாலை உள் வாங்கியது - 45% ரூ 4.0 கோடி திமுகவிற்கு கொடுத்தால் பாலம் அப்படித்தானிருக்கும்


ரிஷி கௌதம்
மே 19, 2025 15:04

பார்த்து அடுத்த மழையில் பாலம் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு பாலத்தின் கட்டுமானம் சிறப்பாக தரமானதாக இருக்கும். எல்லாம் CCC படுத்தும் பாடு...


A P
மே 19, 2025 14:47

இந்த ஆபத்தான சாலை போடுவதில் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் , அதிகாரிகள், அரசியல் வாதிகள் , அமைச்சர்கள் அனைவரும் , கேடு கேட்ட மிருகங்கள்.


Raghavan
மே 19, 2025 21:23

நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ எங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு 60,000 கோடி சம்பாதிக்கும் போது நாங்கள் என்ன இளிச்ச வாயர்களா. இந்த விடியல் ஆட்சி இருக்கும்போதுதான் நாங்கள் சம்பாதிக்க முடியும்.


சுரேஷ் பாபு
மே 19, 2025 14:45

இந்த திராவிஷ மாடல் ஆட்சியில் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதும் பள்ளிக்கூடம் இடிந்து விழுவதும், ரோடு உள்வாங்கி விழுவதும் சகஜமப்பா.


Ramamoorthy M
மே 19, 2025 14:26

கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் - இது தான் திராவிட மாடல்


புதிய வீடியோ