உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!

மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை நடத்தினார்.இது குறித்து, தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.நேற்றைய தேதி வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்த முதல்வர் தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.https://www.youtube.com/embed/I9-e47kCIskமேலும், அவர் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொய்வு ஏற்படக்கூடாது!

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை?தீர்வு காணப்பட்டவை எத்தனை? உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்த விதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பிணி மாடல்
ஜூலை 22, 2025 19:18

வெளியே இருக்கும்போதே சட்டம் ஒழுங்கு இன்ன பிற சந்தி சிரிக்கிறது. இதுல ஆஸ்பத்திரியில் இருந்து பணி யா? இன்னும் என்ன என்ன நடக்கப் போகுதோ...?


Sitaraman Munisamy
ஜூலை 22, 2025 19:12

கூட்டணி கட்சிகளின் அலப்பறை தாங்க முடியல அதனால அப்போல்லோ மருத்துவமணியாக்கு சென்று விட்டார்


Anand
ஜூலை 22, 2025 16:55

யாரையும் நம்ப முடியாது, கொஞ்சம் அசந்தால் கூட முன் செய்த வினை ரவுண்டு கட்டி அடிக்கும்...


cpv s
ஜூலை 22, 2025 16:36

this all are thiravida model drama to get vote for next election, they making people to foolish for again get vote in next election.


Thravisham
ஜூலை 22, 2025 16:31

ஜனங்க நம்பிட்டாங்க. நாடகமே


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 22, 2025 16:29

முதல்வர் எப்போது டெவெலப்மென்ட்... டெவெலப்மென்ட் ...டெவெலப்மென்ட் தான் உடல்நிலை சரியில்லாதபோதும் ...எப்போதும் தமிழ்நாட்டை பற்றியே சிந்தனை .. அதனால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது ..


Rajan A
ஜூலை 22, 2025 18:00

Super comedy


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 22, 2025 16:03

இட்லி சாப்பிட்டறாரா இல்லை மசால் தோசயா இல்லை. நீ இங்க வெளியே இருந்தாலே ஒரு முடியும் நடக்காது இப்போ அங்க உக்கார்ந்து என்னத்த பரிக்கப்போற ...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 16:02

எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும். மக்களின் ஆசையும் இது தான். அப்பல்லோ மருத்துவமனை என்பதால் சிசிடிவி காமிராக்கள் கழற்றி வைத்து இருப்பார்கள். மக்கள் ஏன் செலவு அதிகமானாலும் தனியார் மருத்துவ மனைக்கு செல்கிறார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.


R.MURALIKRISHNAN
ஜூலை 22, 2025 15:47

நான் வருஷத்துக்கு அப்புறம் வெளிய வந்து மக்களை சந்திக்கும் போது தலை மட்டுமல்ல......


G Mahalingam
ஜூலை 22, 2025 15:37

திராவிட மாடல் ஆட்சியில் மன்னிப்புக்கு ஒரு மரியாதை இல்லாமல் போய் விட்டது. எதற்கு எடுத்தாலும் கோட்டில் முன் மன்னிப்பு மற்றும் வருத்தம்.‌ பாவம் ஐஏஎஸ் அதிகாரிகள். திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட நிலைமை


சமீபத்திய செய்தி