உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றுங்கள்: அ.தி.மு.க.,வுக்கு சைதை துரைசாமி வேண்டுகோள்

எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றுங்கள்: அ.தி.மு.க.,வுக்கு சைதை துரைசாமி வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; 'எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்' என்று, அ.தி.மு.க.,வுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசுடன் நட்போடு பழகி, தேர்தலில் கூட்டணி அமைத்தே, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., வென்றார். தஞ்சை லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட, அ.தி.மு.க., ஆதரவு கொடுக்காததால், காங்கிரசுடனான கூட்டணி முறிந்தது. அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதனால், இந்திரா மீண்டும் பிரதமரானதும் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின், காங்கிரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து, தி.மு.க.,வை தனிமைப்படுத்தும் முயற்சியில், எம்.ஜி.ஆர்., ஈடுபட்டார். திருப்பத்துார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று, ஆதரவு கொடுத்தார்.தி.மு.க., கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தார். இது, அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது; மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.கடந்த 1984ல், எம்.ஜி.ஆர்., உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்திரா நேரில் வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெற வசதிகளை செய்து தந்தார். 1984ல், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மத்திய அரசின் உதவிகள் பயன் தந்தன. எனவே, ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல, பா.ஜ.,வுடன் இணைந்து பலமான கூட்டணி அமைத்து, வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எனவே, எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்துங்கள்; எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளையும் தி.மு.க., எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து, 2026ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து, கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஏப் 03, 2025 17:09

எம்.ஜி.ஆர் தானே? மொரார்ஜி தேசாயின் மிரட்டலுக்கு பயந்து இந்திரா காந்திக்கு தஞ்சையில் போட்டியிட வாய்ப்பை மறுத்தவர். சிங்கார வேலு சிக்வர் என்ற டம்மியை வேட்பாளராக்கியவர். இந்திரா பிறகு கர்னாடகா சிக்மகளூரில் வெண்றார் என்பது வேறு விஷயம்.


naranam
ஏப் 03, 2025 14:09

ஆனால் இந்தத் துரோகி பழனியை வைத்துக் கொண்டு என்ன செய்வது?


Natchimuthu Chithiraisamy
ஏப் 03, 2025 12:21

எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று, அ.தி.மு.க.,வுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


sridhar
ஏப் 03, 2025 11:31

இது எல்லோருக்கும் தெரிந்ததே . ஆனால் தனிநபர் விருப்பு வெறுப்புகளால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுகின்றன . இதில் சீமான் விஜய் வேறு.


kr
ஏப் 03, 2025 09:25

MGR formula of one third assembly seats for Congress and two thirds Lok Sabha seats for Congress was a very pragmatic one. BJP and ADMK can start with a similar formula for 2026 assembly polls


M R Radha
ஏப் 03, 2025 08:16

பத்துத் தோல்விக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது, வரவே வராது. அவருக்கெதிராக எம்ஜியார் பக்தர்களும் ஜெயா விசுவாசிகளும் ஓன்று சேர்ந்து தூக்க வேண்டியதுதான். ஈபிசை விட சீனியரான பண்ருட்டி முயற்சி எடுத்து தினகரன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தால் சூப்பர்


Haja Kuthubdeen
ஏப் 03, 2025 10:03

பன்ருட்டி ப்யூஸ் போன பல்ப்....அவரால் இப்ப பத்து ஓட்டுக்கள் வாங்க முடியுமா!!!


VENKATASUBRAMANIAN
ஏப் 03, 2025 07:52

நல்ல அறிவுரை. எடப்பாடி கேட்பாரா


SRIDHAAR.R
ஏப் 03, 2025 07:25

அனுபவசாலிகள் ஐ அனைத்துக்கொள்ளுங்கள்


Padmasridharan
ஏப் 03, 2025 07:02

"மத்திய அரசுடன் நட்போடு பழகி..." இப்பொழுது இந்திரா அம்மையாரும் இல்லை, ஜெயலலிதா அம்மாவும் இல்லை. பா. ஜ வுடன்தான் இனையணுமா வெற்றிபெற. வெற்றிக்காக என்ன வேணாலும் செய்யறதுக்கு அரசியல் நடிகர்கள் ready


தத்வமசி
ஏப் 03, 2025 06:48

சூப்பர் அப்பு. மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி. நடுவுல பூந்து வந்தவருக்கு இது விளங்குமா ? இரண்டு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து திரை மறைவு வேலைகளை செய்து கொண்டிருந்தால் இவர்களின் காலம் முடிந்து புதிய சகாப்தம் படைக்க பிஜேபியும் சீமானும் காத்திருக்கிறார்கள். பிஜேபி ஆளும்கட்சி, சீமான் எதிர்க்கட்சி. திராவிடக் கட்சிகள் காணாமல் போகும். என்ன விசை... என்ன சத்தம் அங்கே... ஒன்னுமில்லைங்கன்னா... நா பாட்டுக்கு போயிடறேன்னா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை