உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று (அக்.29) நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த மைதானங்களில் விளையாட ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 என்று கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2.33 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கணக்கிடப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளும் ஒரே புள்ளியில் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந் நிலையில் ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அந்த முடிவை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கைவிட முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி இன்று(அக்.30)அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது; மாணவ - மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மேயர் பிரியா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சாண்டில்யன்
அக் 31, 2024 03:41

விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெரியத்தனக்காரர்களோ அல்லது கிரிக்கெட் பிரபலங்களோ தங்கள் சொந்த செலவிலேயே இந்த ஒன்பது மைதானங்களை மயானங்களாகிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம் அவர்களை பொறுத்தவரை இந்த செலவு ஜுஜுபி மாநகராட்சி பொறுப்பிலானால் எதிரிகள் கழுதை புரண்ட களமாக்கி விட்டு அவர்களே அரசை தூற்றுவார்கள் தனியார் பொறுப்பானால் தூற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும் அதான் இந்த எதிர்ப்பு


சாண்டில்யன்
அக் 30, 2024 20:41

விமான நிலையம், துறைமுகம் என்று எதையும் தனியாருக்கு தாரை வார்க்கலாம் அதற்கெல்லாம் ஒரு ராசி வேண்டும். மாநகராட்சி கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்ய ஒரு டெண்டர் விடலாம்தான் சரியாக செய்வார்களா என்றால் அடித்து சொல்லலாம் செய்ய மாட்டார்களென்று.நம்மூர் தொழிலாளர் நல சட்டம் அப்படி இந்த சூழ்நிலையில்தான் கடந்த காலங்களில் எதையுமே செய்யாமல் மனிதருள் தெய்வம் என்று நல்ல பேரெடுத்தார்கள்.


Ganesan
அக் 30, 2024 17:59

வேலையற்ற வேலை மாநகருக்கு பாஸ் டு வாபஸ்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 30, 2024 17:47

நேற்று இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தந்த திமுக உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் வாங்கிய மாதிரி தெரியவில்லையே


ஆரூர் ரங்
அக் 30, 2024 15:08

எந்த உதை? உதை பந்து விஷயத்தில் உதை என்ன வாங்கினார்?


narayanansagmailcom
அக் 30, 2024 14:32

திமுக மாடல் அரசிடம் அரசை நடத்த பணம் இல்லை என்றால் டாஸ்மாக் கில் குடிக்க வருபவர்களிடம் தினமும் தலைக்கு 100 ருபாய் வசூலிக்கலாம் அல்லவா. எதிர் கட்சிகள் மற்றும் மக்கள் கேட்டால் மக்களை குடியில் இருந்து மீட்க திமுக அரசின் புதிய கொள்கை என்று கூறலாமே


Ganapathy
அக் 30, 2024 14:26

நேற்று இந்த படு மஹா தண்டமான மக்கள் விரோத தீர்மானங்களை நிறைவேற்ற நடந்த கூட்டத்திற்கான செலவை திமுக ஏற்கவேண்டும். அதாவது எந்தவிதமானமுன் பின் யோசனையும் இல்லாம கமிஷன் கிடச்சா சரின்னு திட்டங்களை அறிவித்து தனியாரிடம் கொடுத்து அசிங்கப்பட்டு பின் திரும்ப வாபஸ் வாங்குவது. இதாண்டா திராவிடமாடல்.


narayanansagmailcom
அக் 30, 2024 14:02

அமெரிக்கா மற்றும் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வந்த நிதி என்ன ஆயிற்று முதல்வரே. எல்லாம் மக்களை ஏமாற்ற தான. முதல்வர் உன்மையிலேயே தமிழ் மக்களை காக்க வேண்டும் என்று நினைத்தால் கோபாலபுரம் சொத்துகளை விற்று காப்பாற்றலாம் அல்லவா. ஸ்டாலின்னால் அதை செய்ய முடியுமா.


narayanansagmailcom
அக் 30, 2024 13:46

மாடல் அரசுக்கு பிபி வந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.


Sundar R
அக் 30, 2024 13:36

அரசாங்கத்தில் இருந்து கொண்டு திமுக காரங்க நம்ம பாக்கெட்டில் இருக்கிற காசையெல்லாம் வாங்கிக்கிட்டு இருந்தாங்க. நல்ல வேளையாக இந்த முறை கூட்டணி கட்சியினர் வந்து மக்களைக் காப்பாத்திட்டாங்க.


புதிய வீடியோ