மேலும் செய்திகள்
சினிபிட்ஸ் 1
54 minutes ago
இன்றும் நாளையும் வெப்பம் 3 டிகிரி வரை அதிகரிக்கும்
55 minutes ago
விஸ்வ ஹிந்து பரிஷத் வேதாந்தம் உடல் தகனம்
56 minutes ago
நில அளவை பயிற்சி மையங்கள் அமைக்க வருவாய் துறை முடிவு
57 minutes ago
ஸ்ரீநாத் பயணம், 'வைரல்' முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. வேகப்பந்து வீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் மனம் கவர்ந்த ஸ்ரீநாத், பெங்களூரு மெட்ரோ ரயிலில், 'ட்ராலி பேக்' உடன் சாய்ந்து நின்றிருந்த படம், எக்ஸ் தளத்தில் பலரையும் கவர்ந்தது. ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட அந்த படத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்ரீநாத்தின் பழைய சாதனைகளை குறிப்பிட்டு, அவரது எளிமையை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ராஜினாமா அறிவிப்பில் உருக்கம் உ.பி., - ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா மிட்டல், 13 ஆண்டு அரசு பணிக்கு பிறகு, ராஜினாமா செய்வதாக வெளியிட்ட உருக்கமான அறிவிப்பு, 'டிரெண்டிங்' ஆகியுள்ளது. 'உண்மையான அதிகாரம் என்பது எந்த ஒரு பதவியில் இருந்தும் வருவதல்ல; மக்களின் நம்பிக்கையில் இருந்தே வருகிறது. 'முதல்முறையாக நில உரிமை பெற்ற குடும்பம், கண்ணியத்துடன் வாழ வாய்ப்பு பெற்ற மாற்றுத்திறனாளி, வயல்களுக் கு நீர் கிடைக்கப் பெற்ற விவசாயிகள் என, அனைவரின் கண்களிலும் அது தெரிந்தது. ஒவ்வொரு அரசு கோப்புக்கு பின்னாலும் ஒரு மனிதர் இருக்கிறார்; அவர்களின் கண்ணியத்தைக் காப்பதே உண்மையான நீதி என்பதை நான் கற்றுக்கொண்டேன். 'நான் பெற்ற அன்புக்கும், மரியாதைக்கும் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களே காரணம். இன்று நான் பதவியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், முதல் முறை தங்கள் ஊருக்கு குடிநீர் வந்தபோது நடுங்கும் கைகளால் என்னை தொட்டு ஆசி வழங்கிய மூதாட்டியின் தொடுதல், என் வாழ்நாள் முழுவதும் என்னை விட்டு நீங்காது' என்று கூறியுள்ளார். எல்லாமே, 'ஓசி'யா? வேலைக்கு விண்ணப்பித்த ஒருவரிடம், தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்த விரிவான திட்டத்தை தயார் செய்து தருமாறு கேட்டது ஒரு நிறுவனம். அதற்கு அந்த விண்ணப்பதாரர், 'இப்படி ஒரு திட்டம் தயார் செய்ய ஏஜென்சியை அணுகினால், அவர்கள், 2,000 முதல் 3,000 டாலர் கட்டணம் கேட்பர். 'அந்த வேலையை அவர்கள் என்னிடம் இலவசமாக செய்யும்படி சொல்கின்றனர். நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் திட்டம் தயார் செய்வதற்கான செலவுத்தொகை உரிய வகையில் வழங்கப்படும் என்றால் செய்வேன். ப்ரோ... எல்லாமே ஓசியில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த வலைதள பிரியர்கள் பலரும், அதேபோன்ற தங்கள் அனுபவத்தை, ஆதங்கமாக கொட்டித் தீர்த்துள்ளனர். 'டிரெண்டிங்'கில் டு பிளெசி பாலிவுட் மற்றும் போஜ்புரி நடிகரான ரவி கிஷன் தொடர்பான கிண்டல் வீடியோக்கள் - ஆடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து, 'டிரெண்டிங்'கில் உள்ளன. 'ஒர்க் பிரம் ஹோம்' என்பதை, 'ஹோம் பிரம் ஒர்க்' என்றும், 'ஜல்தி தி லேட்' என்றும் அவர் தனக்குத் தெரிந்த மொழியில் பேசியது, 'டீன்' வயதினரின் கிண்டல் வீடியோக்களாக, இணையத்தை கலக்கி வருகின்றன. கால்பந்து கிளப்புகளான ஜுவென்டிஸ், லிவர்பூல் உள்ளிட்டவை, ரவி கிஷன் தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோக்களை குறு வீடியோக்களாக வெளியிட்டு 'டிரெண்ட்' செய்தன. அதேபோன்று, ரவி கிஷனின் பிரபல நடனத்தை காப்பி அடித்து ஒரு வீடியோவை, 'ராட்டர்டாம் டாக்கர்ஸ்' அணி கேப்டன் டு பிளெசி வெளியிட்டுள்ளார். அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த, 'ரீல்ஸ்' வீடியோ, இணையத்தில் வேகமாக பரவுகிறது. 14 கி.மீ.,க்கு ரூ.4,000? பிரிட்டனில் 3 ஆண்டு வேலை பார்த்து விட்டு பெங்களூரு வந்த அபிஷ்னா என்பவர், விமான நிலையத்தில் இருந்து 14 கி.மீ., தொலைவில் இருக்கும் வீட்டுக்கு செல்ல டாக்சி கட்டணமாக, 4,000 ரூபாய் செலுத்தி ஏமாந்துள்ளார். 'மீட்டர் கட்டணம் மட்டும்தான் என்று டிரைவர் கூறியதால் தான் டாக்சியில் ஏறினேன். கடைசியில் 4,000 ரூபாய்க்கு பில் கொடுத்து விட்டார்' என்று தன் வேதனையை, 'லிங்க்டு இன்' பக்கத்தில் கொட்டியுள்ளார் அபிஷ்னா. 'அறிமுகம் இல்லாத ஒரு இடத்துக்கு செல்பவரை இப்படி எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். இதில் நான் கற்றுக் கொண்ட பாடம், டாக்சியில் ஏறுவதற்கு முன் கட்டணத்தை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான்' என்று அபிஷ்னா கூறியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், பெங்களூரு, 'டிராபிக் ஜாம்' விவகாரம், உலக பிரசித்தி பெற்றதாச்சே!
54 minutes ago
55 minutes ago
56 minutes ago
57 minutes ago