உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கார் உற்பத்தி துவக்குவதில் ‛போர்டு உறுதி: சிக்கல் என்ற தகவலுக்கு மறுப்பு

சென்னையில் கார் உற்பத்தி துவக்குவதில் ‛போர்டு உறுதி: சிக்கல் என்ற தகவலுக்கு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போர்டு' நிறுவனம் இந்திய சந்தைக்கு மீண்டும் திரும்புவது குறித்த இறுதி முடிவு தாமதமாவதாக வதந்தி பரவிய நிலையில், அந்நிறுவனம் இதை மறுத்துள்ளது. சென்னை மறைமலை நகர் ஆலையில் உற்பத்தியை துவங்க வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி உள்ளது.இது குறித்து, போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:உலகச் சந்தைக்கான உற்பத்திக்கு சென்னை ஆலையை பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். எப்போது உற்பத்தி துவங்கும்; எந்த வகையான கார்கள் உற்பத்தி செய்யப்படும் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ச்சியான ஆதரவுக்கு தமிழக அரசுக்கு நன்றி.இவ்வாறு தெரிவித்து உள்ளது.அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபரானதால், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது, வாகன நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை ஆலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் திறக்க குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படுகின்றன. போர்டு நிறுவனம், இந்த ஆலையில் மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்காக இந்த ஆலையை சீரமைக்க, 900 கோடி முதல் 2,700 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும் என தொழில் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.கடந்த 2021ல், இந்த ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஏற்றுமதிக்கு இந்த ஆலையை பயன்படுத்த இருப்பதாக கடந்த செப்டம்பரில் தெரிவித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Tetra
பிப் 07, 2025 12:06

வர வேண்டியது வந்துடுச்சு போல


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 09:41

அவங்களே திரும்ப உற்பத்தியைத் துவக்கலாம் ன்னு முடிவு பண்ணுனதை திராவிடியால் மாடல் எப்படியோ மோப்பம்புடிச்சு [ஆமாமா .... நீங்க ஆரம்பியுங்க ..... ஆனா, நாங்க சொல்லி நீங்க பூட்டைத் திறந்த மாதிரி இருக்கட்டும்] ன்னு ஸ்டிக்கர் ஒட்டுனுச்சு ..... திராவிடியால் வாய் முகூர்த்தம் FORD க்கு வழிச்சுக்கிட்டு போயிருச்சு போல .....


Venkataraman
பிப் 06, 2025 09:18

அதுமட்டுமல்ல. எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் திமுகவின் முதல் குடும்பத்துக்கு கப்பம் கமிஷன் கட்டாமல் தொழிலை நடத்த முடியாது.


rama adhavan
பிப் 06, 2025 09:14

வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது.


Kasimani Baskaran
பிப் 06, 2025 07:22

ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் போர்ட் நிறுவனத்தின் பங்கு நிறைய உண்டு. அதை வைத்தே திராவிடர்கள் போர்ட் நிறுவனத்தை சென்னையில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்று அடித்துச்சொல்லலாம்.


venugopal s
பிப் 06, 2025 17:57

உங்கள் குற்றச்சாட்டு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை