உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர். கட்சி அலுவலகத்தில் ஜெ., உருவச்சிலைக்கு இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2yspbvun&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு, அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். அவர் 77 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் , 'இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது, என்றார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க., மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் இன்று. அ.தி.மு.க., தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!

தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன்

தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் இன்று. இந்த நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் தி.மு.க., அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

நடிகர் ரஜினி காந்த் மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள, ஜெயலலிதா இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், 'ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும்' என ரஜினி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Madras Madra
பிப் 24, 2025 15:35

திராவிட சேற்றில் மலர்ந்த தாமரை


SP
பிப் 24, 2025 14:37

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால் கூட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் இன்று அவர் இல்லை என்றவுடன் அவர் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இபிஎஸ் உட்பட.


Madras Madra
பிப் 24, 2025 14:01

அம்மா இல்லாமல் பல தீயவர்கள் தைரியமாக அரசியலில் வலம் வந்து கவளம் காண்கின்றார்கள்


ஈசன்
பிப் 24, 2025 12:50

ஜெயலலிதா பல நல்ல விஷயங்களை செய்திருந்தாலும், அவர் சிறை தண்டனை பெற்று திரும்பி வந்த பிறகு, அவர் மேல் இருந்த மரியாதை பலருக்கும் குறைத்து விட்டது.


Barakat Ali
பிப் 24, 2025 13:21

கரெக்ட்டா சொன்னீங்க ..... சிக்குனாத்தான் குற்றவாளி .... சிக்கலைன்னா புத்திசாலி .....


Barakat Ali
பிப் 24, 2025 12:32

செங்கோட்டையன் ஆப்சென்டா ????


Venkateswaran Rajaram
பிப் 24, 2025 12:32

அனைத்து கொடிய மிருகங்களும் கூடும் புனித இடம்


Oviya Vijay
பிப் 24, 2025 11:38

தேர்தல் பற்றிய என் கணிப்புகளில் முதன் முதலில் தவறியது எனில் அது 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தான். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பது தான் எனது கணிப்பாக இருந்தது. ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்து அதிமுக வெற்றி பெற்றது. பலநாட்கள் இதற்கான காரணத்தை அறிய முற்பட்டிருக்கிறேன்... எவ்வாறு என் கணிப்பில் பிழை ஏற்பட்டது என்று... கடைசியில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் ஆணாதிக்க மனோபாவமுடைய ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் பார்வையில் ஜெயலலிதா மிக உயர்ந்த இடத்தில் இருந்தார் என்று... ஏனெனில் அவர் தன் கட்சி அமைச்சர்களை வரிசையாக குனிந்து நிற்க வைத்து கும்பிடச்செய்து நடத்திய விதத்தையும், அவர்களை தன் காலில் விழச் செய்து உள்ளூர மகிழ்ந்த நிகழ்வுகளையும் பார்த்து இந்தியாவே அவரை விமர்சித்துக் கொண்டிருந்தது. இவ்வாறான டயர்நக்கிகளின் கண்கொள்ளாக் காட்சிகளால் இன்புற்ற பெண்கள் ஏதோ தங்கள் சார்பாக ஜெயலலிதா எனும் ஒருவர் ஒட்டு மொத்த ஆண்களையும் பழி வாங்குவதாக எண்ணினர்... அதன் விளைவே பெண்களின் பெருவாரியான ஓட்டுகள் 2016 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது... ஒருவேளை இவர் உயிரோடிருந்திருந்தால் 2021 தேர்தலிலும் இவரே ஆட்சி அமைதிருந்தாலும் ஆச்சர்யப்பட்டிருக்க முடியாது. திமுகவுக்கு சரியான எதிர் என்றால் அது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவேயன்றி இப்போதிருக்கும் எடுபுடி தலைமையிலான காமெடி கட்சி அல்ல... சேரா இடம் சேர்ந்து வழி தவறி தன் வாழ்வையும் குறுகிய காலத்தில் இழந்து விட்டார்... இவரது மரணம் இயற்கையானது அல்ல என்று நம்மில் பல பேருக்கு உறுதியாக தெரிந்தும் அரசியல் என்னும் அரக்கனிடம் கேள்வி கேட்க தைரியமில்லா கோழைகளாக உள்ளோம் என்பதே உண்மை.


Mettai* Tamil
பிப் 24, 2025 13:52

போன தி மு க தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் , கொடநாடு கொலை வழக்கு தெடர்பான வழக்கை திரும்பவும் விசாரிப்போம் .தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று சொன்னார்கள் ...ஆனால் 4 வருஷம் ஓடிவிட்டது ..ஒன்னும் நடக்கவில்லை ..ஏன் இதை ஸ்டாலின் கைவிட்டார் என்று ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதினால் புண்ணியமாபோகும் ப்ளீஸ் ...


முக்கிய வீடியோ