உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நேற்று (ஜூலை 30) லோக்சபா தேர்தல் தோல்வி, எதிர்வரும் தேர்தல் கூட்டணி பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்றார். கூட்டம் நடந்து கொண்டேயிருக்கும்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதனால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நரம்பியல் பிரச்னை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ