உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் காலமானார்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் காலமானார்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஜெ., பேரவை மாநில இணை செயலாளருமான குணசேகரன் (அ.தி.மு.க.,) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 58.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bn7lhzia&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க.,வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.நுரையீரல், கணையத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை இறந்தார்.மறைந்த குணசேகரனுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த குணசேகரன், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார்.2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினார். அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் குணசேகரன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று மதியம் திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை