உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிவாளை ஓங்கினார் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: அரசு விழாவில் ஒப்பந்ததாரருக்கு அதிர்ச்சி

அரிவாளை ஓங்கினார் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: அரசு விழாவில் ஒப்பந்ததாரருக்கு அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் ஒப்பந்தக்காரரை பார்த்து அரிவாளை ஓங்கிய தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ரூ 2.59 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு வந்த முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், 'என்னை ஏன் விழாவிற்கு அழைக்கவில்லை' என ஆத்திரத்தோடு பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2m6s5eg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்தக் கட்டடம் கட்டும் ஒப்பந்தக்காரரை தகாத வார்த்தையில் பேசினார். தேங்காய் உடைக்கும் அரிவாளை, ஒப்பந்ததாரரை பார்த்து ஓங்கும் காட்சிகளும், வெட்டி விடுவேன் என ஆவேசமாக கூறியபடி தேங்காய் உடைத்தார். அவர் அரிவாளை ஓங்கியதை கண்டதும், அங்கிருந்த அலுவலர்கள், கட்சியினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Suresh Sivakumar
மே 18, 2025 14:31

... திமுக


உண்மை கசக்கும்
மே 17, 2025 23:07

நம்ம வரி பணத்தில் ஓய்வூதியம் வாங்கும் ...க்கே இவ்வளவு கொழுப்பு..


சுந்தரம் விஸ்வநாதன்
மே 17, 2025 21:36

கல்யாண வீடானாலும் கருமாதி வீடானாலும் அழைப்பு இருந்தாலும் அழைப்பு இல்லாவிட்டாலும், நமது கழகத்தவர் உள் நுழைந்து மொய் எழுதிவிட்டு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ஒரு கட்சியின் தலைவர் அறைகூவல் விடுத்து இருந்தார். இப்போது ஒரு கட்சியின் சிட்டிங் எம் எல் ஏ கூட இல்லை, மாஜி அவர்கள் தனக்கு ஏன் அழைப்பு இல்லை என்று அரிவாளைத் தூக்குகிறார்.


sundarsvpr
மே 17, 2025 19:56

மாஜி தி மு க எம் எல் எ திட்டமிட்டு செய்யவில்லை. கோபத்தில் பேசிய விவகாரம். அப்போது தேங்காய் வெட்ட கையில் அருவாள் இருந்துள்ளது,


SRIRAM
மே 17, 2025 18:53

திமுக ஆட்சியில் இதெல்லாம் நடக்கல என்றால் தான் அதிசயம்.....


N Sasikumar Yadhav
மே 17, 2025 18:18

அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டுபவரை கைது செய்யும் ஏவல் தொறை இந்த மாதிரியான ரவுடி ஆசாமிகளை கைதுசெய்ய பயப்படுகிறது


naranam
மே 17, 2025 17:44

இவனுங்க கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இவங்க வேலையே இது தான?


vijai hindu
மே 17, 2025 17:13

இதையே ஒரு பொதுமக்கள் செய்திருந்தால் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டதாக வழக்குப்பதிவு செய்து உள்ளே வைத்து விடுவார்கள் என்ன கேவலம் காவல்துறை இதை நேரில் பார்த்துக் கொண்டு அந்த எம்எல்ஏ வை உள்ளே தூக்கி வைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இதுதான் விடியல் மாடல் அரசு


Haja Kuthubdeen
மே 17, 2025 16:52

விடியல் இப்படிதானே!!!


sridhar
மே 17, 2025 16:28

சிட்டிங் எம்எல்ஏ ஆபாசமா பேசுவான், முன்னாள் எம்எல்ஏ அருவா வீசுவான் . இது தான் திமுக தரம் .