உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்

கோவை: வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும் நிலையில் தி.மு.க., பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பில் உயிர் இழந்தார்.முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தனது மகன் திருமண விழாவுக்காக திருப்பதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.செல்வராஜ், கோவை மேற்கு தொகுதியில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின்னர் அ.தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.,வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu kandhasamy
நவ 08, 2024 20:32

ஐயோ பாவம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.ஆனால் அ தி முக வில் இருக்கும் போது ஜெயலலிதா அம்மா அவர்களை குன்ஹா நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வந்தபோது அவங்க பார்வையில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் .ஆனால் எங்களை பொறுத்தவரை அம்மா குற்றவாளி அல்ல என தைரியமாக கூறினார் ஆனால் கர்மாவிடமிருந்து அவரால் தப்பிக்கமுடிய வில்லை/முடியாது அவர் மட்டுமில்லை யாராலும் தப்பிக்கமுடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை