உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜாவை நீக்கி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார். பின்னர் அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, அ.தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z1oaswnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமானா அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.,வின் அனைத்து உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார். 2019ல் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து அன்வர் ராஜா பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி வைத்ததால், அன்வர் ராஜா அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ., கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் அன்வர் ராஜா பேட்டி அளித்தார். அவரது பேட்டி அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.,வில் ஐக்கியம்

பின்னர், சென்னையில் உள்ள தி.மு.க., வின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பா.ஜ., கையில் அ.தி.மு.க., !

தி.மு.க.,வில் இணைந்த பிறகு, அன்வர் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யாருமில்லை. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார். அவருக்கு இணையான தலைவர் இனி வருவார்களா என்பது சந்தேகம் தான். இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை; அதனை இ.பி.எஸ்., உறுதிப்படுத்த முடியவில்லை. அ.தி.மு.க.,வை அழித்து, தி.மு.க.,வுடன் மோத நினைக்கிறது பா.ஜ.. அண்ணாதுரையின் கொள்கைக்கு எதிராக அ.தி.மு.க., செல்கிறது. என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ஜ., கையில் அ.தி.மு.க. சிக்கி உள்ளது. கருத்தியல் ரீதியான பயணத்திற்கு என்னை இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி. இந்தியா-பாக் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதேபோல், நான் தான் முதல்வர் என்று இ.பி.எஸ்., கூறுவது உள்ளது. ஹிந்தி எதிர்ப்பு பேராட்ட காலத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். பா.ஜ, என்பது ஒரு எதிர்மறையான சக்தி அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அன்வர் ராஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

veeramani
ஜூலை 25, 2025 09:53

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ராம்நாத் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத ஒருவர் மீடியா உளம் பெருமைப்படுத்தப்படுகிறார் கிட்டத்தட்ட மற்றைய முன்னாள் கட்சியினர் போல அச்சு பிலலாமல் நடக்கிறார்


Viswam Viswam
ஜூலை 23, 2025 17:19

அண்ணன் அன்வர் ராஜா அவர்கள் திமுகவில் இணைந்திருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி இவருக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வீடு கட்டி கொடுத்தார்கள் அந்த வீட்டில் தான் இவர் வசித்து வருகிறார் மேலும் பொறியியல் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார் அதற்கும் புரட்சித்தலைவர் காரணமாக இருந்திருக்கிறார் பதவி பட்டம் செல்வாக்கு தன்னை அடையாளப்படுத்துதல் இவைகளை எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அனுபவித்துவிட்டு இப்போது ஏதோ 26 திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கையில் இவர் அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறார் நிச்சயமாக 26 இல் இருந்து அன்வர் ராஜா அரசியல் அனாதையாய் ஆகி விடுவார் என்பது நிச்சயமாகிவிட்டது


panneer selvam
ஜூலை 22, 2025 17:34

Great Loss to AIADMK alliance , they have lost one vote in Ramanathapuram constituency .


Venkateswaran Rajaram
ஜூலை 22, 2025 10:44

இவர்களுக்கு அரசியல் என்பது வியாபாரம் அதாவது குலத்தொழில் ...அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டிய ஓரிரு மாதங்களிலேயே இடிந்து விழுவது இவர்களை போன்ற வியாபாரிகள் இரண்டு திராவிட கட்சியிலும் 99.999999999% இருப்பதால் தான் ....


Rajah
ஜூலை 22, 2025 09:50

இவர் திமுகவில் இனைந்ததில் ஆச்சரியப்படுவற்கு ஒன்றுமில்லை. இவர் ஒரு அதிமுகவின் உண்மையான விசுவாசியா இருந்திருந்தால் எம்ஜிஆரின் பரம விரோதியான அதுவும் அவரால் தீயசக்தி என்று அழைக்கப்பட்ட திமுகவில் இணைந்திருக்க மாட்டார். இவருடைய குற்றச்சாட்டு அல்லது நோக்கம் சரியாக இருந்திருந்தால் குறைந்த பட்சம் அரசியலில் இருந்து விலகியோ அல்லது விஜய் கட்சியில் சேர்ந்திருக்கலாம். இரண்டிலும் தனக்கு இலாபம் இல்லையென்பதைக் கருதியே தீயசக்தி திமுகவுடன் இணைத்திருக்கின்றார். ஆகவே இவர் திமுகவில் இணைந்ததற்கு இவரின் சுயநலமே காரணம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பெரும் தொகை பணம் தன் குடும்பத்திற்கு உதவும் என்பதை அறிந்து செயல்பட்டிருக்கின்றார்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 21, 2025 20:44

பா ஜ க ஒருவிதமான எதிர்மறையான சக்தி என்றால் திமுக திருடர்களின் சக்தி என்று சொல்லலாம்


பான்மை மாடல்
ஜூலை 21, 2025 19:14

இவர் சிறு பான்மை யா? அடுத்தவன் உழைப்பை இட ஒதுக்கீடு என்ற பெயரில் சுரண்டி திங்கும் கூட்டம்...


Rajasekaran
ஜூலை 21, 2025 18:10

அன்வர் வந்த நேரம் முதல்வர் அப்போலோ அட்மிட்


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 17:40

திமுக தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்று இன்னொரு சாட்சியம் இது


Kulandai kannan
ஜூலை 21, 2025 17:05

நாட்டை விட மதமே முக்கியம் என்று நிரூபிக்கிறார்


சமீபத்திய செய்தி