உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் காலமானார்

சென்னை : தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் 75 இன்று (டிச.14) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a3o769fe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் இறுதியில் உடல் நலம் குறைந்தது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இன்று இறந்தார்.

தலைவர்கள் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வேதனையை தருகிறது என கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; 'பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடித்து, தான் சார்ந்த இயக்கத்தின் மீது ஆழ்ந்த மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்,' என புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும் எதிர்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று இளங்கோவன் உடல் நலம் குறித்து நேரில் சந்தித்து விசாரித்தார்.

இளங்கோவன் வாழ்க்கை வரலாறு

1948ம் ஆண்டு டிசம்பர் 21ல் ஈரோட்டில் இளங்கோவன் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் பட்டம் பெற்ற இவர் தந்தை சம்பத் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தாயார் சுலோசனா சம்பத், அதிமுக அமைப்பு செயலாளராக இருந்தார்.

சிவாஜி கட்சியில் இளங்கோவன்

1984ல் நடந்த சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏ.,வானார். பின்னர் நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியில் சேர்ந்து 1989ல் நடந்த தேர்தலில் ஈரோடு பவானி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். சிவாஜி, தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்தபோது, இளங்கோவன் மீண்டும் தாய் கட்சியான காங்கிரசில் ஐக்கியமானார்.1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரசின் மாநில தலைவராக பதவி வகித்தார். 2004 லோக்சபா தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2,14,477 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.பி.,யாகி மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார். 2009 லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014 லோக்சபா தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். 2014 முதல் 2017 வரை மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார். 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோல்வியை சந்தித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த தனது மகன் திருமகன் 2023ல் திடீரென மரணமடைந்ததால், அதே தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 184 )

MN JANAKIRAMAN
ஜன 02, 2025 20:53

போதும்யா இந்த நியூஸ் ....தூக்குங்க ..அப்படி என்ன செஞ்சிட்டாரு ???


sundar
டிச 18, 2024 16:20

ஒரு சாமானியன் இறந்தாலே பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். இவர் காங். கட்சியின் முன்னாள் தலைவர். இராமசாமி குடும்ப வாரிசு . ஜவுளி அமைச்சராக இருந்தவர்.வீட்டருகில் இருப்பவர் கூட இறுதி ஊர்வலத்தில் இல்லை. 10 நபர்கள் கூட இல்லை .விஜயகாந்த் இறப்பிற்கு தமிழகமே வருந்தியது. அரசியல் வியாதிகளே சற்று மக்களைப் பற்றியும் சிந்தியுங்கள். கொள்ளையடிப்பது மட்டும் வாழ்க்கையல்ல.இல்லாவிட்டால் அனாதையாக சாக வேண்டியது தான்.


Narayanan
டிச 16, 2024 15:21

ஒரு திமுக எம் எல் ஏ காங்கிரஸ் காலமானார் வருந்துகிறோம். அவரின் வெற்றிக்கு ஏராளமாக பணம் சிலவு செய்து வெற்றி கனியை பறித்து கொடுத்தது திமுக. காங்கிரஸ் பைசா சிலவு இல்லாமல் ஒரு எம் எல் ஏ யை பெற்றது . . திமுக கூட்டணியே தொடர்வதற்கு காரணம் பணம்தான் .


GoK
டிச 16, 2024 13:11

யாரு நின்னு டிக்கெட் வாங்கினாலும் டிக்கெட்டுதான் ...குடும்பத்துலேருந்து உடலாமில்ல ...ஏதாவது ஒரு நிதியை ..பகுத்தறிவு கூட்டம்தானே?


GoK
டிச 16, 2024 13:09

அடிச்சுதுடா லாட்டரி அதுவும் ஜாக்பாட் ...இந்த தடவையும் அஞ்சாயிரம், பிரியாணி, சாராயம்தானா ...விலைவாசி ஏறியிருக்கு முதல்வன் புதல்வன் மறுமவன் மச்சான் அக்கா ...போட்டுக்கொடுங்க ஒரு பத்தாயிரமாவது ...இருக்குதில்ல?


Narayanan
டிச 16, 2024 15:24

திமுக இப்போ சிலவு செய்யாது . இன்னும் இந்த ஆட்சி இருக்க போவது ஒருவருடம்தானே . இந்த ஒரு சீட்டு மாறி போனால் ஒன்றும் தலைமுழிகிப்போயிவிடாது.


Naga Subramanian
டிச 16, 2024 06:13

இனி பிறக்கட்டும் விடியல் ஈரோடு தொகுதிக்கு.


kalyan
டிச 15, 2024 13:12

ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம் . மீண்டும் ஓர் இடைத்தேர்தலா ?


vadivelu
டிச 15, 2024 16:25

அவரின் மனைவி தேர்தலில் நிற்க போகிராராரோ?


sankar
டிச 15, 2024 12:17

ஆழ்ந்த அனுதாபங்கள் - இருக்கும்போது யார் எவர் என்று பாராமல் சொன்ன வசைமொழிகள்


Natarajan Ramanathan
டிச 15, 2024 09:31

எனக்கு தெரிந்து தீயசக்திக்கு பிறகு,,,,


வல்லவன்
டிச 15, 2024 08:12

கூஜா தூக்குபவர்களிடம் தரத்தை எதிர்பார்க்க முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை