உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்க நகை பூங்கா அமைக்க அடிக்கல்

தங்க நகை பூங்கா அமைக்க அடிக்கல்

கோவை குறிச்சி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், முதல்கட்டமாக, 81.40 கோடியில் ஐந்து தளங்களுடன் தங்க நகை பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. கல்வெட்டை திறந்து பணியை முதல்வர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, தங்க நகை தயாரிப்பாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. என்னென்ன வசதி? தரைதளம்: வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, மின் அறை முதல் தளம்: காத்திருப்பு இடம், தங்க வங்கி, தயாரிப்புகள் டிஸ்பிளே, கருத்தரங்கு கூடம், கேட், கேம் லேப், ஹால் மார்க்கிங், லேசர் கட்டிங். பயிற்சி மையம், தங்க ஆலோசனை கூடம், குழந்தைகள் காப்பகம். இரண்டு முதல் ஐந்தாம் தளம்: ஒவ்வொரு தளத்திலும் தலா, 75 நகை தயாரிப்பு பட்டறைகள், லாபி, மின் அறைகள் உள்ளிட்டவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை