உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெகன் மூர்த்தியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைப்பு

ஜெகன் மூர்த்தியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர் காதல் திருமணம் செய்தார். இதுதொடர்பாக அவரது தம்பி கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின் இந்த வழக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி மனுத்தாக்கல் செய்தார்.அவரது மொபைல் போன் உரையாடல்கள் வாயிலாக கடத்தல் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது எனக்கூறி அவருக்கு முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து எந்நேரமும் ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.அவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. முன்ஜாமின் மறுக்கப்பட்டதும், அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது.எனவே அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். ஜெகன் மூர்த்தி டில்லி சென்று விட்டதாக கூறப்படுவதால் அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே கடத்தப்பட்ட சிறுவன், அவரது தாயார், காதல் தம்பதி ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று அழைத்து விசாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 14:49

ஜெ மூர்த்தியை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் கொண்டு வர மிரட்டல் வழிமுறை?


Rajan A
ஜூன் 29, 2025 12:45

நிதானமாக தேடி, அடுத்த எலெக்ஷன் முடியும் போது கண்டிப்பாக கண்டுபிடித்து சீட் கொடுக்க வேண்டும்


GMM
ஜூன் 29, 2025 08:57

ஜெகன் மூர்த்தி ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர். இவர் தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகர் அனுமதி இல்லாமல் தொகுதி விட்டு வெளியே செல்ல முடியாது. குற்றவாளி போல் மறைந்து வாழ முடியாது. முதலில் MLA தேர்வை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும். சபாநாயகர் போலீஸ் அறிக்கை அடிப்படையில் சபை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் தான் போலீஸ் தனிப்படை அமைக்க முடியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2025 21:07

ஒரு தொகுதி எம்.எல்.ஏ. தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகர் அனுமதி இல்லாமல் தொகுதி விட்டு வெளியே செல்ல முடியாது என்ற கருத்து தவறானது. ஒரு தொகுதி எம்.எல்.ஏ. சபாநாயகர் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எங்கும் செல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை