உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லிங்க் வாயிலாக மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை

லிங்க் வாயிலாக மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை

சென்னை: 'சமூக வலைதளங்களில் வரும் போலி லிங்குகள், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., வாயிலாக வரும் லிங்குகள் போன்றவற்றை, 'கிளிக்' செய்ய வேண்டாம்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுதும், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் என, பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த சேவைகளை பெற, parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான, 'டெஸ்ட்' தவிர, பெரும்பாலான சேவைகளை, இணையதளம் வாயிலாகவே பெறலாம். இதற்கான கட்டணத்தையும், இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். ஆனால், சமீபகாலமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, வாகனப்பதிவு போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தலாம் எனக்கூறி, வாடிக்கையாளர்களுக்கு, 'வாட்ஸாப்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, ஓரிரு எழுத்துக் கள் மாற்றப்பட்ட லிங்க்குகளை அனுப்பி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு போன்ற சேவைகளை பெற, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான 'parivahan.gov.in' என்ற இணையதளம் மற்றும், 'mParivahan' என்ற செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மோசடியில் ஈடுபட சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பும் லிங்குகள், எஸ்.எம்.எஸ்., லிங்குகளை, யாரும், 'கிளிக்' செய்ய வேண்டாம், வேறு செயலியையும் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 09, 2025 17:51

கெவர்மெண்ட் ஆபீசில் அனைத்திற்கும் OTP அனுப்பிடறாங்க... எவனையாவது புடிச்சி தண்டனை வாங்கி குடுக்க துப்பில்லை.


அப்பாவி
செப் 09, 2025 17:48

டிஜிட்டல் புரட்சி ஹைன். வளரும் வல்லரசு ஹைன்.


சிந்தனை
செப் 09, 2025 16:25

திறமையாக கொள்ளையடிக்கும் வேலையை யாரால் செய்ய முடியும், அரசு ஊழியர்களின் உதவி இல்லாமல்... அரசு ஊழியர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தூக்கு தண்டனை என்று சட்டம் வேண்டும் அப்பொழுதுதான் நாடு நல்லா இருக்கும்


Barakat Ali
செப் 09, 2025 11:01

டீம்காவுக்குப் போட்டியா நெறய பேரு இறங்கியிருக்காங்கன்னு புரியுது .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை