உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேடையில் கலங்கிய சாதனை மாணவிக்கு இலவச வீடு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மேடையில் கலங்கிய சாதனை மாணவிக்கு இலவச வீடு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவிக்கு இலவச வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா உள்ளதாக மாணவி பிரேமா கண்ணீர் மல்க பேசியிருந்தார். மாணவி கண்ணீர் மல்க பேசிய 24 மணி நேரத்தில், வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=obcxzlf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கருணாநிதி கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Murthy
செப் 27, 2025 15:33

வீடு வேண்டும் என்றால் மேடையில் முதல்வர் முன்பு அழுவதற்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் .


கூத்தாடி வாக்கியம்
செப் 27, 2025 11:18

முதலில் ஏ ஷைகள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குங்கள் . நீ என்ன வீடு கட்டி கொடுக்கிறது அவனே கட்டிப்பான்


Ramesh Sargam
செப் 27, 2025 01:50

புதிய வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையைத்தான் முதல்வர் அறிவித்துள்ளார். என்னமோ வீடு கொடுத்தாற்போல நினைத்து அவரை புகழவேண்டாம். வீடு முதலில் அந்த ஏழை மாணவிக்கு கிடைக்கட்டும். அப்பொழுது நானும் உங்களுடன் சேர்ந்து அப்பா முதல்வரை புகழ்வோம்.


என்றும் இந்தியன்
செப் 27, 2025 00:20

திராவிட கட்சிகள் திருடுவது பல ஆயிரம் கோடிகள். ஆனால் வாக்குகள் அம்மாவிற்கு ஆயிரம், பிள்ளைக்கு ஆயிரம் என்று தேர்தல் வரும்.முன்பே லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் திறமை திராவிட கட்சிகளிடம் இருந்து தான் கற்று கொள்ள வேண்டும். இங்கு இலவச வீடு என்று சொல்லி விட்டு பிரதமர் திட்டத்தை நாம் முதல்வர் ஸ்டாலின் என்று பெயர் மாற்றம் செய்து அதில் வேண்டுமானாலும் வீடு கட்டி கொடுப்பார்கள்


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 26, 2025 23:57

கமெண்ட் எல்லாம் voice audio பதிவாக போடும் காலம் விரைவில் வர வேண்டும். அப்போது தான் இன்னும் இந்த திராவிட கட்சிகள் உருட்டை கழுவி ஊத்த வசதியாக இருக்கும். எனக்கு தெரிந்து கள்ளச்சாராயம் குடிச்சு செத்து போனவனுக்கு 10லட்சம் என்று அறிவித்தது தான் திமுக யின் மிக பெரிய சாதனை. மற்ற எல்லோ அறிவிப்பும் தேர்தல் நேரத்தில் மக்கள் DMK கட்சிக்கு வாக்கு அளிக்கவும், இவர்கள் செய்யும் ஊழல் களை கண்டும் காணாமல் இவர்களுக்கு வாக்கு அளிக்க முன்கூட்டியே 200, 500, 1000 ரூபாய் என்று லஞ்சம் கொடுத்து வருகிறது. இதுவும் ஒரு லஞ்சம் தான், இங்கு லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். ஆனால் DMK, CONGRSSS கட்சிகள் செய்த மிக பெரிய சாதனை டெல்லி வில் பாஜக வெற்றி பெற வேறு வழி இல்லாமல் பாஜக உம் மகளிருக்கு 1500 அறிவித்தது. இது தான் திராவிட கட்சிகளின் மிக பெரிய சாதனையில் ஒன்று


Chandru
செப் 26, 2025 20:14

ஸ்டாலினை பார்த்தாலே இப்போது அழுவது போல்தான் இருக்கிறது.


தாமரை மலர்கிறது
செப் 26, 2025 19:47

எத்தனையோ பேர் ஒழுகும் வீடு கூட இல்லாமல் பிளாட்பாரத்தில் படுத்து கிடக்கிறார்கள். அவர்களின் அழுகுரல் ஸ்டாலினை சென்று அடையவில்லை. மேடையில் அழுதால் மட்டுமே கிடைக்கும்.


சிட்டுக்குருவி
செப் 26, 2025 19:22

கடந்த அறுபது வருடங்களாக இரு திராவிடங்களும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன .அதில் ஒன்று சமூகநீதி ,பெரியார் கொள்கை நீதி என்றெல்லாம் பொய்பரப்புகின்றனர் .மக்களுக்கு நீதி தான் கிடைத்தபாடில்லை .மேடையில் கண்ணீர் வடித்த மாணவிக்கு இலவச வீடு .பெருமைதான் .ஆனால் மேடைக்கு வராமலேயே ,வரமுடியாமலேயே தினம் தினம் கண்ணீர் வடிக்கும் இன்னும் எத்தனை இவரைப்போன்ற மாணவிகள் ,மாணவர்கள் அவர் ஊரிலேயே இருக்கின்றார்கள் என்று அவரையே கேட்டு எல்லோருக்கும் இதே போன்று இலவச வீடு கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் .திராவிடர்கள் ஒரு நிமிடம் சிந்திப்பீர்களா ?நாம் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செயகின்றோமே இன்னுமா இதுபோன்ற மழைநீர் ஒழுகும் குடிசையில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதுதானா நான் பின்பற்றும் பெரியார் போதித்த சமூக நீதி .நாம் இவ்வளவு நாட்களாக சமூகநீதி ஏற்படுத்துகின்றோமே என்று பொய்பேசினோமா ? இன்னும் எவ்வளவு ஒழுகும் குடிசையில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் ?என்பதை எல்லாம் சிந்திப்பீர்களா? என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் ?உங்களுக்கு தெரிந்ததெல்லாம் சென்னை மட்டுமே தமிழ்நாடா ?சிந்தித்து செயல்படுவீர் .


Nagarajan S
செப் 26, 2025 19:13

ஆஹா பெண்களே இனி ஸ்டாலின் அப்பாவிடம் அழுங்கள். உங்களுக்கு தேவையானதை அவர் கொடுத்துவிடுவார்.


Govindaraju
செப் 26, 2025 19:09

இதில் பயன் பெற்றோர் மேட்டுக் குடியினர் அல்ல. நாளும் உழைத்து கைக்கும் வாய்க்கும் எட்டாத வகையில் ஜீவனம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்களின் குழந்தைகள். அனைவருக்குமான கல்வியை மறுத்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தவே செய்யும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை